சம்யுக்தா விஷ்ணுகாந்த் பிரச்சினைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காரணமா? அடுத்தடுத்து அவிழும் உண்மைகள்
பிரபல சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் பிரச்சினைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் நடிகை தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்த போது காதல் ஏற்பட்டு சுமார் ஏழு மாதங்கள் காதலித்து வந்துள்ளனர் சம்யுக்தா விஷ்ணுகாந்த்.
கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும், வெறும் 15 நாட்களில் பிரச்சினை ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்துள்ளனர்.
இருதரப்பினரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கியதோடு, மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் விஷ்ணுகாந்த் சம்யுக்தாவின் பல ஆடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.
இந்த ஆடியோக்களுக்கு அவ்வப்போது சம்யுக்தா விளக்கம் கொடுத்து வருகின்றார். விஷ்ணுகாந்தும் தனது பக்கத்தின் விளக்கத்தினை அளித்து வருகின்றார்.
இவர்களின் பிரிவிற்கு விஜே ரவியும் ஒரு காரணம் என்றும் ரவி சம்யுக்தாவின் முன்னாள் காதலன் என்றும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது இவர்களின் இருவரின் பிரிவிற்கு நடிகை ஒருவர் காரணம் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
யார் அந்த நடிகை?
விஷ்ணுகாந்த் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு குறித்த நடிகை சம்யுக்தாவிடம் அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டது மட்டுமின்றி, அவரை முத்தம் கொடுக்க, கட்டிப்பிடிக்கவும் செய்துள்ளார். இதனை சம்யுக்தா தன்னிடம் அந்த நடிகை தன்னிடம் ஆண் போன்று நடந்துகொள்வதாக கூறியுள்ளதாக விஷ்ணுகாந்த் கூறியுள்ளார்.
ஏற்கனவே சம்யுக்தாவிற்கும், அவரது அப்பாவிற்கும் பிரச்சினை ஏற்பட்ட போது குறித்த நடிகை தலயைிட்டு பெரிய பிரச்சினையாக்கிவிட்டாராம். இதனால் அந்த நடிகையோடு பேசக்கூடாது என்று கூறியுள்ள விஷ்ணுவை எதிர்த்து, சம்யுக்தா எனக்கு அந்த நடிகை தான் வேண்டும் என்று கூறியுள்ளாரா.
இவ்வாறு இவர்கள் கூறும் நடிகை சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை லாவண்யாவா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் முல்லை, சிற்பிக்குள் முத்து சீரியலில் சம்யுக்தாவுடன் நடித்தவர் என்பதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.