டெலிட் செய்த புகைப்படத்தினை மீண்டும் பகிர்ந்த சம்யுக்தா! காரணம் என்ன?
சின்னத்திரை நடிகையான சம்யுக்தா இன்ஸ்டாவில் தான் டெலிட் செய்த புகைப்படத்தினை பதிவிட்டு, தன்னுடைய மனநிலையை விளக்கமாக கேப்ஷன் கொடுத்துள்ளார்.
நடிகை சம்யுக்தா விஷ்ணுகாந்த்
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் 8 மாதங்கள் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் செய்த இரண்டு மாதங்களின் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இருதரப்பினரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கியதோடு, மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் விஷ்ணுகாந்த் சம்யுக்தாவின் பல ஆடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.
இந்த ஆடியோக்களுக்கு அவ்வப்போது சம்யுக்தா விளக்கம் கொடுத்து வரும் நிலையில், தான் கையில் விருது வாங்கியிருக்கும் புகைப்படத்தினை டெலிட் செய்துவிட்டு தற்போது மீண்டும் பதிவிட்டுள்ளார் சம்யுக்தா.
சம்யுக்தாவின் மனநிலை
தான் இந்த இடத்திற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளதாகவும், தன்னை எதிர்ப்பவர்கள் ஆயிரம் புகார்கள் அளிக்கலாம்... "I got this reward for my hamy ave on me".
தன்னை நம்பி ஆதரவு அளித்த தனது குடும்பத்திற்கு நன்றி என்று கூறியவர், கடந்த ஆண்டு தனியார் சேனல் ஒன்றில் தனக்கு சிறந்த நடிகை என்று இந்த விருதை கொடுத்த நிலையில், இந்த வருடம் அதே சேனல் எனது உண்மையை அறியாமல் இழுவுபடுத்துவதாக கூறியுள்ளார்.
மேலும் மீடியாவிற்கு யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் பக்கம் தான் நியாயம் இருப்பதாக அனைவரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இங்கு மற்றவரின் வாழ்க்கையை சீரழித்து, அதில் மகிழ்ச்சியை அனுபவித்து சந்தோஷமாக காணப்படுகின்றனர்.
தீய காரியத்தை செய்பவர்களும், தவறான காரியங்கள் செய்பவர்களே இந்த சமூகத்தில் நல்ல பெயரை பெறுவதுடன், அவர்களையே அனைவரும் நம்புகின்றனர் என்று இதனை பாடமாக கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
ஆனால் கடவுள் தீங்கு நினைப்பவர்களுக்கு விரைவில் பரிசு கொடுப்பார். விஷத்தன்மை உள்ளவர்களால் இந்த புகைப்படத்தினை டெலிட் செய்தேன்... ஆனால் தற்போது ஒரு சுதந்திர பெண்ணாக மீண்டும் இப்புகைப்படத்தை பதிவிடுகின்றேன் என்று கூறியுள்ளார்.