பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரின் நிஜ தங்கை இவரா? நடிகைகளை மிஞ்சிய பேரழகு- என்ன வேலை செய்யுறாங்க தெரியுமா?
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு தான்.
டிஆர்பி-யில் எப்போதுமே டாப் 5க்குள் இடம்பிடிக்கும் இந்த சீரியல் எப்போதுமே டிரெண்டிங்கில் தான் இருக்கிறது.
அண்ணன்- தம்பியின் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள குடும்ப பாங்கான சீரியல் இதுவாகும். சீரியல் மட்டுமின்றி, இதில் நடிக்கும் நடிகர்கள் கூட ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தராய் வாழ்ந்து வருகிறார்கள்.
இதில் கடைசி பையனாக அதாவது கண்ணனாக நடித்து வருபவர் சரவண விக்ரம், தன்னந்தனியாக இருந்த கண்ணன், இப்போது தான் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலிப்பது போல் கதை நகர்கிறது.
இந்நிலையில் இவருடைய சொந்த குடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட, ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
அந்த போட்டோவில் இருக்கும் அவரது தங்கையைப் பார்த்து, இவருக்கு இவ்வளவு அழகான தங்கச்சி இருக்காங்களா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அவர் பெயர் சூர்யாவாம், ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறாராம். இதைப்பெருமையுடன் பதிவிட்டுள்ள சரவண விக்ரம், தன் தங்கை மென்மேலும் வளரவேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.