கண்ணனை வெளியேறச் சொல்லும் மூர்த்தி! கதிரின் முடிவு என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் கண்ணனை தனது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், மூர்த்தி பயங்கர கோபத்துடன் கண்ணனை வெளியே செல்லக் கோரியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மூர்த்தி கதிர் இருவரும் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆடம்பரத்தால் அசிங்கப்பட்ட கண்ணன்
வீட்டை விட்டு வெளியே சென்ற ஐஸ்வர்யா கண்ணன் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு கடன் அதிகமாக வாங்கி பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட நிலையில் அவர்களை காப்பாற்ற சென்ற கதிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்பு ஒருவழியாக மூர்த்தி, ஜீவா இருவரும் கதிரை அழைத்து வந்துள்ளனர். தற்போது கண்ணன் ஐஸ்வர்யாவை கதிர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
கண்ணனை பார்த்த மூர்த்தி பயங்கர கோபத்தில் காணப்பட்டதுடன், வெளியேறக் கூறியுள்ளார். ஆனால் தனம் கண்ணன் இங்கே இருப்பதாக கூறியுள்ளார்.
கண்ணனை அழைத்து வந்தது கதிர் என்று அறிந்ததும் மூர்த்தி ஒன்றும் பேசாமல் கோபத்தில் காணப்படுகின்றார்.