ஜீவாவிற்காக அரங்கேறும் பாசப்போராட்டம்... ஒன்று சேர்வார்களா அண்ணன் தம்பி?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரச்சினை முடிந்து ஜீவாவை ஜனார்த்தனன் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்ற நிலையில், ஜீவா இதற்கு சம்மதிக்காமல் அண்ணனுடன் ஒன்று சேர்ந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகளில் ஜீவா மட்டும் பிரிந்து தனது மாமனார் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.
வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடத்திய போது ஜீவாவிற்கும், ஜனார்த்தனனின் இரண்டாவது மருமகனுக்கு சண்டை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பின்பு ஒருவழியாக சண்டை முடிந்து ஜீவாவை வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என்று ஜனார்த்தனன் கூறி கையை பிடித்து அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றார்.
ஆனால் ஜீனாவோ அவரது கையை எடுத்துவிட்டு தனது அண்ணன் மூர்த்தியுடன் செல்வது போன்று காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |