விரைவில் முடிவிற்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்: மீனாவின் கேள்வியால் குழம்பிப் போன ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவிற்கு வரப்போவதாக பல தகவல்கள் வெளியாகி வந்த போதிலும் தற்போது சீரியலில் நடிக்கும் மீனா வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்து இருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்தக் கதையில் நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து அவரவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சினைகளை காட்சிகளாக காட்டி வருகிறார்கள்.
இந்த சீரியலில் தற்போது பல பிரச்சினைகளைத் தாண்டி ஆசையாக கட்டிய புதிய வீட்டிற்கு கிரஹபிரவேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
வைரலாகும் மீனாவின் பதிவு
கடந்த நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவிற்கு வரப்போவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், அந்த சீரியலில் ஜீவாவின் மனைவியாக நடித்து வரும் மீனா என்கிற ஹேமா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப் போகிறதா? என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
அதற்கு இந்தக் கேள்வியை நாங்கள் தான் உங்களிடம் கேட்க வேண்டும் எனவும் கதை முடிய போகுது ஆனால் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என்று குழந்தைகள் பெரியவர்களாகி அவர்களின் கதையை தான் மீண்டும் எடுக்கப் போகிறார்கள் என்று பலரும் கமெணட் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |