உண்மையை போட்டுடைத்த மீனா: குடும்பத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சியான திருப்புமுனைகள்
தனத்திற்கு இருக்கும் புற்றுநோய் பற்றிய உண்மையை முல்லையிடம் சொல்ல அடுத்துடுத்து நடக்கும் காட்சிகள் ப்ரோமாவாக வெளியாகியிருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தனத்திற்கு மார்பக புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதும் அடுத்தடுத்து தனது ஆசைகளையும் கடமைகளையும் நிறைவேற்றி வருகின்றார்.
இன்றைய ப்ரோமோ காட்சியில்
இதுநாள் வரைக்கும் மீனாவிற்கும் தனத்திற்கும் தெரிந்த உண்மையை முல்லை கேட்டறிந்துக் கொண்டார்.
மீனா மற்றும் தனத்திற்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருந்த முல்லைக்கு சந்தேகம் ஏற்பட நேராக மீனாவிடம் சென்று கேட்டிருக்கிறார்.
ஆனால் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என மறைக்க முயன்ற மீனா இனியும் மறைக்க முடியாது என்று தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பதை சொல்லிவிட்டார்.
இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத முல்லை தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். பிறகு சிறிது நேரம் கழித்து மூவரும் கோயிலில் சந்திக்கும் காட்சி ப்ரோமொ காட்சியாக வெளியாகியிருக்கிறது.