மீனாவுக்காக பட்டையுடன் கிளம்பிய செந்தில்.. வீட்டில் வெடிக்கும் பூகம்பம்- கோமதி கேட்டிருப்பாரா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா தன்னுடைய சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செந்தில் பட்டையுடன் கிளம்பிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2
பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த இந்த சீரியல் தற்போது தன்னுடைய இரண்டாவது பாகத்தை துவங்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கிறார்கள். 2ஆம் பாகத்தில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.
செந்திலின் புதிய அவதாரம்
இந்த நிலையில், தங்கமயில் செய்த பித்தலாட்டங்கள் அனைத்தும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிய வந்த வண்ணம் உள்ளது. இந்த விடயங்கள் அனைத்தையும் தனக்குள் வைத்துக் கொண்டு சரவணன் மற்றவர்களிடம் சாதாரணமாக இருக்கிறார்.
இதற்கிடையில், தங்கமயில் பாண்டியனுக்கு கோல் செய்து சரவணன் பற்றி விசாரிக்கிறார். இதனால் பாண்டியனுக்கு சரவணன்- தங்கமயில் இருவரின் மீது சந்தேகம் வந்துள்ளது.

அப்பாவிடம் திட்டு வாங்கிய சரவணன் வீட்டிற்கு வேகமாக வந்து தங்கமயிலிடம், “ நீ பண்ணுன வேலையெல்லாம் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிந்தால் உன்ன இங்க இருக்கவே விடமாட்டாங்க, ஆனால் நீ என்ன பண்ணுற..” என கேட்டிக் கொண்டிருக்கும் பொழுது கோமதி அதனை கேட்டு விடுகிறார்.
இப்படி வீட்டில் பிரச்சினை வெடிக்கையில், மீனா உடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என திட்டம் போட்ட செந்தில் காலையில் சாமியார் கெட்டப்பில் வரும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைலரலாகி வருகின்றது. இதனை பார்த்த பலரும், “ பொண்டாட்டிக்காகவா?” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |