Neeya Naana: 42 வருடங்களாக கஷ்டம் குறையல.. காதலித்த தாயின் குமுறல்- மகளுக்கு வந்த சந்தேகம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் காதலித்து திருமணம் செய்து கொண்ட தாயின் குமுறலை கேட்ட மகளுக்கு வந்த சந்தேகம் இணையவாசிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
42 வருட திருமண வாழ்க்கையின் குமுறல்
இந்த நிலையில் இந்த வாரம் நீண்ட நாட்களாக காதலித்து காத்திருந்து திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள், அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் வாதங்களில் கலந்து கொண்டனர். அதில் பேசிய கோபிநாத், “காதலித்து காத்திருந்து திருமணம் செய்த பெற்றோர்கள் ஏன் பிள்ளைகளின் காதலுக்கு ஓகே கூறுவது இல்லை.” என கேட்டிருந்தார்.
அதற்கு பதில் பேசிய தாய் ஒருவர், “ அவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் திருமணம் செய்தாலும், தற்போது 42 வருடங்களாகி விட்டது. ஆனாலும் கஷ்டங்கள் குறையவில்லை. இதனால் தான் காதல் திருமணம் செய்து வைக்க மனம் இல்லை.” எனக் கூறுகிறார்.

இன்னும் ஒருவர், “என்னுடைய ஊருக்கு செல்வதற்கு எனக்கு இன்று பயமாக இருக்கிறது, என்னுடைய கசப்பான அனுபவங்கள் பிள்ளைகளுக்கு இருக்கக் கூடாது..” என பேசியிருக்கிறார். இதற்கு பிள்ளைகள், “உங்களுக்கு கசப்பான அனுபவம் இருக்கிறது, என்பதற்காக எங்களுடைய ஆசையில் தடையாக இருக்காதீங்க, உங்களுடைய திருமண வாழ்க்கையின் தாக்கம் எங்களுக்கும் இருக்கிறது..” என அடித்துப் பேசியிருக்கிறார்கள்.
சாதாரணமாக ஆரம்பித்த வாதம், சற்று நேரத்தில் இரண்டு தரப்பினர்கள் மத்தியில் பரபரப்பாகியது.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |