பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குறித்து மீனா கொடுத்த விளக்கம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முடிவிற்கு வந்து இரண்டாவது பாகம் வெளியாகவுள்ள நிலையில் மீனா வெளியிட்ட பதிவொன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மீனா குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, வெங்கட் ரெங்கநாதன் மற்றும் குமரன், சுஜிதா ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
இவரின் இந்த கதாப்பாத்திரமும் நடிப்பும் அனைவருக்கும் பிடித்துப் போக இவருக்கென பல ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகிறார்கள்.
பொய்யான தகவல்
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் சில நாட்களில் முடிவிற்கு வரவுள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதாக அண்மையில் ப்ரோமோ வெளியாகியிருந்தது.
இந்த இரண்டாம் பாகத்தில் மீனாவாக நடிக்கும் ஹேமா ராஜ் குமார் இதிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆனால் இது வெறும் வதந்தி எனவும் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை என்றும் அப்படி உறுதியானால் நானே அறிவிக்கிறேன் தயவு செய்து பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் ஒரு பதிவில் கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |