நீரிழிவு நோயை நெருங்க விடாது தடுக்கும் சக்திவாய்ந்த கீரை….ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் மருந்து!
பாலக்கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.
இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது.
பாலக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
சோம்பு தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? தினமும் குடித்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா?
நன்மைகள்
பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.
பாலக் கீரையை அதிகம் எடுத்து கொண்டால் ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை உணவோடு எடுத்து கொண்டால் பால் அதிகம் சுரக்கும்.
பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
கண் பார்வை நன்றாக தெரிய பாலக் கீரை உதவி செய்கிறது.
கண்ணில் ஏற்படும் நோய்களான மாலைக்கண் நோய், மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்பு, போன்றவை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
திராட்சையை வருடக்கணக்கில் கெடாமல் வைத்திருக்கும் அதிசயம்….துளியும் ரசாயனம் இல்லை!
பாலக்கீரையின் மருத்துவ பயன்கள்
- பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.
- பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.
- கண் பார்வை நன்றாக தெரிய இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.
பாலக்கீரையில் சாம்பார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- பாலக் கீரை - 1 கட்டு
- வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்
- சின்ன வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்
- தக்காளி - 1
- சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- புளி - 1 எலுமிச்சை அளவு
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
- கொத்துமல்லித்தழை - சிறிது
செய்முறை
கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை வேகவைத்து கொள்ளவும். நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
புளியை கரைத்து வடிகட்டி ஊற்றவும்.
வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும்.
இறுதியில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
முக்கிய குறிப்பு
அன்றாட கீரைகளை நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும் உங்க உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க உதவி செய்யும்.