சோம்பு தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? தினமும் குடித்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா?
எடையை குறைக்க முடியாமல் இன்று இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர்.
முடியாது என்று ஒன்றும் இல்லை. உணவில் ஒரு சில மாற்றங்களை செய்தாலே எடை குறைப்பு முயற்சியில் விரைவில் மாற்றத்தினை காண முடியும்.
சோம்பு உடல் எடையைக் குறைக்க உதவும். எப்படி என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
10 நிமிடத்தில் சுவையான கேரட் சிப்ஸ் - செய்வது எப்படி?
சோம்பு எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?
சோம்புவை உணவில் கலந்து சாப்பிடுவதை விட தண்ணீரில் ஊர வைத்து குடித்தால் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தினை காண முடியும்.
சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள்.
பாத எரிச்சலால் அதிகமாக அவதிப்படுகிறீர்களா? அலட்சியம் வேண்டாம்
ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து.
நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம். சோம்பு ஒரு இயற்கையான நச்சு நீக்கி ஆகும்.
எனவே நீங்கள் சாப்பிட்ட பிறகு இதனை உட்கொள்ளும் போது உங்கள் உடலில் சில அதிசயங்களை சோம்பு செய்கிறது. இது உங்கள் உடலில் இருந்து பல்வேறு நச்சுக்களை வெளியேற்றி உங்கள் செரிமான அமைப்பை சீராக்குவதன் மூலம், செரிமானத்தை எளிதாக்குகிறது.
சோம்பு தண்ணீர் செய்முறை
ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதையை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அல்லது நீங்கள் காலையில் சோம்பு டீ போட்டும் குடிக்கலாம்.
1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.
குறிப்பு
சோம்பு என்றழைக்கப்படும் பெருஞ்சீரக விதைகள் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை ஆகும்.
இவை அனைத்தும் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதன் காரணமாக சோம்பு எடையை குறைக்க உதவும் என்று உறுதியாக சொல்லலாம். எனவே காலையில் ஒரு டம்ளர் சோம்பு தண்ணீரை தொடர்ந்து குடித்து நல்ல மாற்றத்தினை உணருங்கள்.