உலகின் மிக விலை உயர்ந்த கீரை! அப்படியென்ன மருத்துவ குணம் இதில் இருக்கிறது?
இயற்கையின் மிகவும் செழுமையான ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளில் ஒன்றாக பசளிக்கீரையை நாம் அடையாளப்படுத்த முடியும்.
குறைந்த அளவு கலோரிகளையும் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களையும் கொண்ட அமைந்தது இந்த பசளிக்கீரை.
இதில் நூற்றுக்கணக்கான ஆரோக்கிய நலன்கள் காணப்படுகின்றன இந்த பச்சை இலை கீரை வகையை இந்தியர்கள் மிகவும் விரும்பி உட்கொள்கின்றனர்.
பசளிக் கீரையை அழகாக சிற்றுண்டி வகைகளில் சூப்புகளில் சைடிஷ் களில் ஃப்ரூட்ஸ் ஸ்மூத்திகள் என பல்வேறு வழிகளில் பயன்படுத்த முடியும்.
பசளிக் கீரையில் ஏனைய மரக்கறிகளை விட அதிக அளவிலான புரதச்சத்து உள்ளடங்கியுள்ளது, என்பதுடன் நார்ச்சத்தும் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்தியாவில் 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பசளிக்கீரை விற்பனை செய்யப்படுகிறது நாடு முழுவதிலும் பசளிக்கீரை விளைச்சல் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகின் விலை உயர்ந்த பசளி கீரை வகையாக யமாஷிதா என்ற புதிய பசளி வகை அறிமுகம் செய்ப்பட்டுள்ளது.
அசாவுமி யமாஷிதா (Asafumi Yamashita)என்ற நபரினால் இந்த பசளிக் கீரை பயிரிடப்படுகின்றது.
26 முதல் 28 பவுன்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது இந்திய விலையில் சுமார் 2700 முதல் 3000 ரூபாய் வரையில் ஒரு கிலோ பசளி கீரை விற்பனையாகும்.
யமாஷிதா ஜப்பானின் டோக்கியோ நகரை பூர்வீகமாகக் கொண்டவர் தற்பொழுது இவர் பிரான்சின் பாரிஸ் நகருக்கு அருகாமையில் உள்ள சாப்பிட் என்னும் நகரில் வாழ்ந்து வருகின்றார்.
1975 ஆம் ஆண்டு 22 வயதில் யமாஷிதா பாரிஸ் நகருக்கு கல்வி கற்பதற்காக வருகை தந்தார் மற்றும் பாக்சிங் விளையாட்டுகளில் அதிக நாட்டத்துடன் அவர் பாரீசுக்கு வருகை தந்தார், எனினும் இந்த விளையாட்டுகளை கைவிட்டு விட்டு பச்சை கீரை வகைகளை உற்பத்தி செய்வதில் தனது அதீத நாட்டத்தை பின்னர் வெளிக்காட்டினார்.
ஜப்பானின் பொன்சாய் முறையில் பாரிஸில் பல்வேறு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அவர் மேற்கண்டார்.
1989 ஆம் ஆண்டு 500 டாலர் முதலீட்டில் பொன்சாய் வர்த்தகத்தை பாரசீல் ஆரம்பித்தார் இவ்வாறு வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள் அவரது பொன்சாய் மரங்கள் களவாடப்பட்டன பின்னர் பொன்சாய் செய்கையை கைவிட்டு விட்டு ஜப்பானிய செஃப் ஒருவரின் ஆலோசனைக்கு அமைய ஜப்பானிய மரக்கறி வகைகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார் பொழுதுபோக்காக பல்வேறு மரக்கறி வகைகள் அவர் வளர்க்கத் தொடங்கினார்.
பரிசில் அரிதாக கிடைக்கப்பெறும் ஜப்பானிய மரக்கறிகளே அவர் வளர்க்கத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டார்.
இவ்வாறு பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த காலத்தில் புதிய வகை பச்சை இலை கீரைகளை அவர் உற்பத்தி செய்யத் தொடங்கினார். அதில் ஒன்றாக யமாஷிதா பசளி என்ற பச்சை கீரையை உற்பத்தி செய்தார்.
இந்த பசளிவகை உலகின் மிக விலை உயர்ந்த கீரையாக கருதப்படுகின்றது. இந்த பசளிக் கீரையை பல்வேறு ரெஸ்டாரன்களுக்கு அவர் விற்பனை செய்தார்.
யமாஷிதா பசளிக் கீரை வகைகள் நட்சத்திர அந்தஸ்துடைய சமயற் கலைஞர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த பசளி கீரையின் தரம் காரணமாக இதன் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதையும் எப்பொழுது என்ன விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதையும் யமாஷிதா தீர்மானம் செய்கின்றார்.
குழந்தையை வளர்ப்பது போன்று மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் இந்த செடிகளை தான் வளர்த்து வருவதாகவும் அதுவே இந்த முயற்சியான்மையின் வெற்றி எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த வகை பசளிக்கீரை மிகவும் உடலுக்கு ஆரோக்கியமானது என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாகவே இவற்றின் விலை மிக அதிகமாக காணப்படுகின்றது. அதிக அளவிலான ஊட்டச்சத்துகளும் ஆன்டிஆக்சிடென்ஸ்களும் காணப்படுகின்றன.
இந்த வகை பசிளிக் கீரையானது நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.
மூளைக்கும் இருதயத்திற்கும் கண்களுக்கும் இந்த பசளிக் கீரை நலன்களை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.