மனைவியுடன் பேரம் பேசுவாரா நடிகர் விஜய்?
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது அது அரசியலில் தாக்கம் செலுத்துவதால் விஜய் அவர் மனைவி சங்கீதாவிடம் பேரம் பேசலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவாகரத்து கேட்ட சங்கீதா
தமிழ் திரையுலக முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்க்கு எதிராக அவருடைய மனைவி சங்கீதா நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் எனகூறி விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல கோர்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
சுமார் 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் சங்கீதா இந்த முடிவை எடுத்துள்ளார். சங்கீதா அந்த மனுவில் விஜய்க்கும் குறிப்பிட்ட அந்த நடிகைக்கும் தொடர்பு இருப்பது தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் மிகவும் அவமானமாக இருக்கிறது எனவே விவாகரத்து வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

விஜய்க்கு தற்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகின்றது. இந்த நேரத்தில் மனைவியின் இந்த விவாகரத்து முடிவு விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் கடுமையாக பாதித்துள்ளது என பலரும் சங்கீதாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு இந்த விவாகரத்து பிரச்சனை ஒரு தடையாக இருக்க கூடாது என மனைவியிடம் பேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சங்கீதா, மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோருக்கு தலா 250 கோடி ரூபாய் வழங்க விஜய் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் விவாகரத்து மனுவை திரும்ப பெற வேண்டும் என விஜய் சங்கீதாவிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்தோ, சங்கீதா தரப்பில் இருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |