நம்ம கோபியா இது! பாக்கியாவுடன் இணைந்து புகைப்படம் வெளியிட்ட கோபி - கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்
பாக்கியாலட்சுமி சீரியல் பாக்கியாவுடன் மீண்டும் இணைந்து மணகோலத்தில் கோபி ஜொலிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலின் கதைச்சுருக்கம்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர் தான் பாக்கியட்சுமி.
மேலும்இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த சீரியலின் கதையம்சம் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதனை மையப்படுத்தியாகவுள்ளது.
பாக்கியாவை விட்டு விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும் சுமார் 20 இலட்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதனால் பாக்கியாவை சாப்பாடு ஓடர்கள் பல செய்து வருகிறார்.
மீண்டும் தம்பதிகளான பாக்கியா - கோபி
இந்த நிலையில் ராதிகாவுடன் வாழ சென்ற கோபிக்கு தற்போது நிம்மதியில்லாமல் குடித்து விட்டு ராதிகாவுடன் சண்டை போட்டு வருகிறார்.
இவர்களின் சண்டை முற்றிய நிலையில் பாட்டி மீண்டும் கோபியை தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அப்போது அவ்வழியில் வந்த செழியனின் கண்ணில் குடித்து விட்டு அகப்பட்ட கோபியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது பாக்கியலட்சுமி கோபி மனைவி பாக்கியாவுடன் இணைந்து இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், “ கோபிக்கு இப்ப தான் புத்தி வந்துள்ளது.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.