பாக்கியாவுடன் அமிர்தாவிற்கும் இப்படி ஒரு உறவா? தாறுமாறாக கருத்துகளை குவிக்கும் காட்சி
மருமகளுடன் இணைந்து குத்தாட்டம் போடும் பாக்கியாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களில் முதல் இடத்தை பிடிக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பித்த போது கணவன் - மனைவிக்கான உறவை அழகாக கூறியிருப்பார்கள்.
இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்பத்தை கொண்டு தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் வெற்றி நடைப் போட்டு வருகிறது.
இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் தான் பாக்கியலட்சுமி என்கிற சுஜித்ரா.
இவர் தான் இந்த தொடரை லிடிங்கில் எடுத்து செல்பவர் என்று கூட சொல்லலாம்.
குத்தாட்டம் போடும் பாக்கியா
இந்த நிலையில் சீரியல்களில் குடும்ப பெண் போன்று இருக்கும் பாக்கியா. வெளியில் அப்படியே அதற்கு மாறாக இருப்பார்.
அந்த வகையில் தனக்கு மருமகளாக நடிக்கும் ரித்திகாவுடன் இணைந்து குத்தாட்டம் போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ மாமியும் மருமகளும் ஹோம்லி போல் நடித்து கொண்டு குத்தாட்டம் போடுகிறார்களா?” மேலும் நடிப்பில் இவர்களை பார்க்கும் போது அம்மா, மகள் போல் இருக்கிறார்கள்.” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.