செல்வத்தை அள்ளிக்குவிக்கும் அனுக்கிரகம் பெற்ற பொருள்- வீட்டில் எங்கு வைக்கணும் தெரியுமா?
பொதுவாக இந்து மதத்தின்படி, லட்சுமி தேவி செல்வத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார்.
ராகு பெயர்ச்சி: அடுத்த 8 மாதங்கள் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க
இவரின் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பெற்ற பொருளாக கற்பூரம் கருதப்படுகிறது.
பச்சை கற்பூரம் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி நிச்சயம் இருப்பார் என முன்னோர்கள் நம்புகிறார்கள்.
அத்துடன் வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள், கண் திருஷ்டி, தீய சக்திகள் போன்றவற்றை விலக்கி கற்பூரம் லட்சுமியை கொண்டு வரும்.
அப்படியானால் பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?
1. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெயர் போன சக்தியாக பார்க்கப்படுகின்றது. இதற்கு ஒரு தட்டு எடுத்து அதில் இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை வைக்கவும். இதனை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும்.
2. பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது. இதனால் ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை வைத்து கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் செய்து வந்தால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
3. தீய சக்திகள் ஓடிவிடும் சக்தி பச்சை கற்பூரத்திற்கு இருக்கிறது. ஆகவே வீட்டில் எப்போதும் பச்சை கற்பூரம் வைப்பது நல்லது. இது வீட்டில் நடக்கும் தேவையற்ற குழப்பங்களை இல்லாமலாக்கும்.
4. வீட்டின் நிம்மதி இல்லாமல் போதல், கெட்ட சக்திகள் இருத்தல், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் உள்ளிட்டவைகளை விலக்கி வைக்கும் ஆற்றல் பச்சை கற்பூரத்திற்கு இருக்கிறது.
5. குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் முழு மனதுடன் வழிபடும் போது பச்சைக் கற்பூரத்தை வைத்து வழிபடலாம்.
6. பச்சைக் கற்பூர டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். இப்படி செய்தால் லட்சுமி தேவியும், குபேரனும் அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கி பணவரவையும், நினைத்த காரியத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |