பாலாடைப் போல் முகம் பளபளக்கணுமா...அப்போ இதை ட்ரை பண்ணுங்க
அனைத்து பெண்களுக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்பதே ஆசை. அதேசமயம் அதற்காக நிறைய விடயங்களை முயற்சியும் செய்கின்றனர்.
பெண்களின் சருமத்தை அவ்வப்போது பாலாடையுடன் ஒப்பிடுவது வழக்கம். சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பாலாடை மாஸ்க் உபயோகப்படுத்தலாம்.
காரணம் பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் இது சருமத்திலுள்ள முகப்பருக்களை உருவாக்கும் கிருமிகளையும் நீக்கிவிடும். சருமத்தில் ஏதேனும் மாசு மருக்கள் இருக்கும்பட்சத்தில் பாலாடையை முகத்தில் தேய்த்து நன்றாக ஸ்க்ரப் செய்யலாம்.
image - kama ayirveda
அதுமட்டுமில்லாமல் பாலாடையை முகத்தில் தடவுவதன் மூலம் சருமத்திலுள்ள வறட்சி நீங்கி ஈரப்பதமாக இருக்கும். சருமத்தின் அழகை அதிகரிக்கும்.
பாலாடை/தேன் - 1 தேக்கரண்டி பாலாடையுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாகக் கலக்கி, முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் இளம் சூடான நீரில் கழுவ வேண்டும்.
பாலாடை/மஞ்சள்- 1 தேக்கரண்டி பாலாடையுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி, முகத்தில் பூசி 10 நிமிடங்களின் பின்னர் கழுவவும்.
பாலாடை/கற்றாழை - 2 தேக்கரண்டி பாலாடையுடன் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்களின் பின்னர் கழுவவும்.
image - stylecreze