ஆண்களே.. முகத்தில் வடியும் எண்ணெய் பசை தடுக்க வேண்டுமா?
சரும பிரச்சினைகளில் ஆண்கள் எதிர்கொள்ளும் எண்ணெய்பசை சருமமும் ஒன்று. இதில், முகப்பரு, மற்றும் எண்ணெய்பசை அவர்களை பாதிக்கவே செய்கிறது.
எண்ணெய் சருமம் நீங்கி சுத்தமான சருமத்தை பெறுவதற்கு எண்ணெய் மற்றும் பருக்கள் இருந்தால் அவற்றை குறைக்கவும் வடுக்கள் வராமல் செய்யவும் ஆண்கள் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
எண்ணெய் சருமம் குறைய ஆண்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்க்கலாம்.
தேவையுள்ள பொருட்கள்
ரோஸ் வாட்டர் - 200 மில்லி
பொடித்த கற்பூரம் - 2 டீஸ்பூன் சருமத்துக்கு பயன்படுத்த கூடியது.
இதை நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு காற்று புகாத பாட்டிலில் சேர்க்கவும். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும். நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 முறை சருமத்தை துடைக்க இதை பயன்படுத்தலாம்.
இது சருமத்தின் எண்ணெய் பசையை குறைப்பது மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றி சருமத்தில் ஏற்படும் தொற்றுகள், அரிப்பு மற்றும் சருமத்தை பாதிக்கும் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்துகிறது.
எண்ணெய் சருமத்தை வெளியேற்ற சருமத்தை எக்ஸ்ஃபோஒலியேட் செய்வது அவசியம். சருமத்தை சரியாக சுத்தம் செய்யாத நிலையில் இது கரும்புள்ளிகள் மற்றும் வைட் ஹெட்ஸ் உருவாக வழிவகுக்கும்.
இது முகப்பரு மற்றும் பருக்களை ஏற்படுத்துவதோடு சுத்தமான தெளிவான சருமத்தை பெற விரும்பும் ஆண்களுக்கு இது முழுமையான சரும சேதத்தை உண்டாக்கலாம். சரும சுத்திகரிப்புக்கு ரோஜாக்கள் மற்றும் சந்தனம் இல்லாமல் நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஸ்க்ரப் வகைகள் இதுதான்.
ஆரஞ்சு தோல் நறுக்கியது - 4 டீஸ்பூன் எலுமிச்சை தோல் - 4 டீஸ்பூன் சீன களிமண் - 50 கிராம் வேப்பிலை தூள் - ஒரு கைப்பிடி அரிசி மாவு - 5 டீஸ்பூன் அனைத்தையும் உலர வைத்து பொருட்களை கலந்து காற்றுபுகாத பாட்டில் சேமித்து வைக்கவும்.
இதை எக்ஸ்ஃபோலியேட் செய்யும் போது ஒரு டீஸ்பூன் எடுத்து புதினா சாற்றில் கலந்து சருமம் முழுவதும் தடவ வேண்டும். அதன் பின் உலர்ந்ததும் ஸ்க்ரப் செய்யவும். இது ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் அகற்ற செய்கிறது.
இது சருமத்தை சுத்தமாகவும் எண்ணெய் இல்லாமலும் வைக்க செய்கிறது. சுத்தமான சருமத்தை பெறுவதற்கு ஆண்கள் சில பராமரிப்புகளை கடைப்பிடிக்க வேண்டும். தினசரி 10 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மது அருந்துவதை குறைக்க வேண்டும். புதிய பழங்கள் சாலட்டுகள் உங்கள் உணவில் முதலிடத்தில் இருக்கட்டும்.
இளநீர், எலுமிச்சை நீர் போன்ற திரவ பானங்களை சேருங்கள். மசாலா, வறுத்த உணவுகள் மற்றும் கார்பனேட்டர் பானங்கள் மற்றும் சோடா போன்றவற்றை தவிர்க்கவும். இலேசான ஆடைகள், பருத்தி ஆடைகள் தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் சருமத்தில் இரத்த ஓட்டம் மற்றும் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். தினசரி இரண்டு வேளை குளியலை தவிர்க்க வேண்டாம். மந்தமான வளர்சிதை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் இருந்தால் பெரும்பாலும் முகப்பரு மற்றும் பருக்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
இதை தடுக்க பச்சை காய்கறிகள் மற்றும் அதிக பழங்களை சேருங்கள்.
பொடுகு இருந்தாலும் முகப்பரு வரலாம். என்பதால் பொடுகுக்கான சிகிச்சையும் மேற்கொள்வது அவசியம். அதன் பிறகு சரும சுத்தத்தை பின்பற்றுங்கள். நிச்சயம் பளிச் சருமத்தை ஆண்களும் பெறுவீர்கள்.