கசப்பே இல்லாமல் பாகற்காய் பக்கோடா செய்து பார்க்கலாம் வாங்க...
என்னதான் பாகற்காய் கசப்பான ஒரு காய்கறியாக இருந்தாலும் அது ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மையளிக்கும்.
அதுமட்டுமில்லாமல் பாகற்காயில் பல ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம்.
இனி பாகற்காய் பகோடா எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - you tube
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 200 கிராம்
அரிசி மா - 20 கிராம்
மிளகாய் தூள் - தேவையான அளவு
கடலை மா - 100 கிராம்
ஓமம் - கால் தேக்கரண்டி
மோர் - சிறிதளவு
ஒரேஞ்ச் ஃபுட் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
image - you tube
செய்முறை
முதலில் பாகற்காயை விதை நீக்கி வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் தண்ணீரை சூடுபடுத்தி அதில் பாகற்காயைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பின்னர் வடிகட்டிக் கொள்ளவும்.
அதன் பின்னர் பாகற்காயை மோரில் போட்டு, 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்படி செய்தால்தான் கசப்பு போகும்.
அதன் பின்னர் பாகற்காயை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, அதில் அரிசி மா, கடலை மா, மிளகாய்தூள், ஓமம், உப்பு, ஃபுட் கலர், சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது அருமையான பாகற்காய் பகோடா ரெடி.