அப்பளம் மீந்துவிட்டதா? மீதியானதை அப்பள பஜ்ஜியாக செய்து விடுங்கள்
திடீரென வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், என்ன செய்து கொடுக்கலாம் என யோசிக்கிறீர்களா? வீட்டில் அப்பளம் இருந்தால் போதும்.
அருமையான அப்பள பஜ்ஜி செய்து கொடுக்கலாம். சரி இனி அதை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - youtube
தேவையான பொருட்கள்
கடலை மா - 100 கிராம்
உளுந்து அப்பளம்/மிளகு அப்பளம் - 4
அரிசி மா - 20 கிராம்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
சமையல் சோடா - 1 சிட்டிகை
எண்ணெய் - 300 கிராம்
உப்பு - சிறிதளவு
image - youtube
செய்முறை
முதலில் அப்பளத்தை நான்காக வெட்டிக்கொள்ளவும். பின்னர் அதில் அரிசி மா, கடலை மா, மிளகாய் தூள், சமையல் சோடா என்பவற்றை நன்கு கலக்கவும்.
பின்னர் இதில் ஒரு தேக்கரண்டி காய்ச்சிய எண்ணெய் விட்டுக் கலந்து நீர் விட்டு பஜ்ஜி மா பதத்தில் கரைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அப்பளத் துண்டுகளை மாவில் தோய்த்து பொரித்தெடுக்ககும்.
வித்தியாசமான அப்பள பஜ்ஜி தயார்.
image - youtube