எந்த கூந்தல் அமைப்பிற்கு எப்போது குளிக்கலாம் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
நம்மில் பலருக்கும் காலையில் ஹேர் வாஷ் செய்யும் பழக்கம் இருக்கலாம். ஆனால் இப்படி செய்வது உண்மையில் உடலுக்கும் முடிக்கும் நன்மை தருமா? என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
தலையில் குளிப்பது
ஒவ்வொருவரும் கூந்தலை எப்போது வேண்டுமாலும் அலசிக்கொள்ளலாம். ஆனால் உங்கள் கூந்தலின் தன்மை குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை இரண்டுமே அதற்கு ஏற்றார் போல் நன்மை மற்றும் தீமைகளை கொண்டுள்ளன என்பது பலருக்கும் தெரியாது.
மென்மையான கூந்தல் உடையவர்கள் தலை குளிப்பதை காலையில் செய்து கொள்ளலாம். காலை நேரத்தில் கூந்தல் சீக்கிரம் உலராது என்ற கவலை இருக்காது. உங்கள் கூந்தல் வெகு எளிதாக உலர்ந்து விடும் என்பதால் காலை நேரம் ஏற்றது.
ஈரமான முடியில் தலை சீவுவது எப்படி என்ற கவலையும் இருக்காது. தலைமுடியும் பாதிக்காது. சுருட்டை முடி உள்ளவர்கள் இரவு நேரங்களில் ஹேர் வாஷ் செய்யலாம். ஏனெனில், இவர்களுக்கு அடர்த்தியான மற்றும் சுருள் சுருளான முடி இருப்பதால் குளித்தவுடன் உலர்வதற்கு சற்று தாமதமாகலாம்.
சரியாக முடியை உலர்த்தவில்லை என்றால் அவசர அவசரமாக சீவுவதால் முடி உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அல்லது சீக்கிரம் உலர வைக்க ஹேர் ட்ரையர் பயன்படுத்த தோன்றும்.
அதனால் மாலை நேரங்களில் தலை குளியல் செய்வது கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் இதைதவிர நமது நேரத்தை கவனத்தில் வைத்துக்கொண்டு நமக்கேற்றவாறு நாம் தலையை கழுவலாம்.
ஆனால் எப்போது கழுவினாலும் தலைமடியை உலர வைப்பது மிகவும் அவசியம். இதனால் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இரவு நேரங்களில் ஹேர் வாஷ் செய்த பிறகு உடனடியாக தூங்க செல்லக்கூடாது.
உங்கள் கூந்தல் ஈரமாக இருந்தால் அது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். மேலும் ஈரத்துடன் தூங்க செல்வதால் பூஞ்சை தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு தூங்கும் போது அதிகமாக வியர்க்கும். இவர்கள் இரவு நேர குளியலை தவிர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |