உடல் எடை அதிகம் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பில் பிரச்சனை ஏற்படுமா? பெண்கள் சந்திக்கும் மிக பெரிய ஆபத்துக்கள்
இன்றைய பெண்களில் பலருக்கும் கர்ப்ப காலத்தில் உடல் எடை பிரச்சனை என்பது இருக்கிறது. ஒரு சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிக குறைந்த எடையுடன் இருக்கிறார்கள். மேலும் சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிக அதிக எடையுடன் இருக்கிறார்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி அது குழந்தையின் ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதிக்கும் என்பது பற்றி தெரியுமா? கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான உணவானது தொப்புள் கொடி வழியாக தான் செல்கிறது என்பதால், தாய் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது மிக மிக அவசியமானதாகும்.
இல்லை என்றால் இது குழந்தையை பாதிக்கும். இந்த காணொளியில் உடல் எடை அதிகம் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பில் பிரச்சனை ஏற்படுமா என்பது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.