கருமுட்டையை தாக்கும் புதுவிதமான புற்றுநோய்.. எந்த வயது பெண்களுக்கு வரும்?
“பொதுவாக சினைப்பை புற்றுநோய் என்பது வயது முதிர்ந்த பெண்களிலும் பார்க்க, இளம் வயது பெண்களை அதிகமாக தாக்குகின்றது” என ஆய்வுகள் கூறுகின்றன.
கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற புற்றுநோய்களின் விளக்கத்திலும் பார்க்க சினைப்பை புற்றுநோய் பற்றிய விளக்கம் போதியளவு மக்களிடம் இல்லை.
இதனால் நாளுக்கு நாள் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடுமையான வயிற்று வலி தான் சினைப்பை புற்றுநோயின் முதல் அறிகுறி என இன்றும் பலர் அறிவதில்லை.
மாறாக, சினைப்பை புற்றுநோய் என்றால் என்ன? இந்த நோய் ஏன் பெண்களை தாக்குகின்றன? அதற்கான அறிகுறிகள் என்ன? என்பதை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
சினைப்பை புற்றுநோய்
பெண்களின் கர்ப்பப்பையில் இரு பக்கமும் முட்டைகளை உருவாக்கும் சிறிய உறுப்பு சினைப்பை எனப்படுகின்றது.
சினைப்பை புற்றுநோய் இருப்பதை அவ்வளவு எளிதாக யாருக்கும் கண்டுபிடிக்க முடியாது. இதன் அறிகுறிகள் அதிகமாகும் பொழுது தான் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வரும்.
பாதிக்கப்படும் பெண்களின் வயதெல்லை
சினைப்பை புற்றுநோயானது குழந்தைகள் முதல் மாதவிடாய் நின்ற பெண்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும்.
அத்துடன் இது என்ன செய்தாலும் தடுக்க முடியாது எனவும் கூறப்படுகிறது.இருந்த போதிலும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு முறையான ஸ்க்ரீனிங் மூலம் கண்டறிந்து உரிய சிகிச்சை கொடுக்கலாம்.
மேலும், (மெனோபாஸ்) அதாவது மாதவிடாய் நின்ற பெண்களை சினைப்பை புற்றுநோய் அதிகம் தாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள்
1. பெண்களின் இடுப்பு அல்லது அடிவயிற்றுப் பகுதியில் கடுமையான வலி ஏற்படல்.
2. வயிற்றில் அசிடிட்டி,ஜீரணமின்மை ஏற்படல்.
3. குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட திருமணமான பெண்கள், குழந்தை பெறுவதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். இதனால் சினைப்பை அதிகமாக தூண்டப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த முயற்சி சினைப்பையை சேதப்படுத்தி புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும்.
4. குழந்தை பெற்ற தாய்மார்கள் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் போது, மார்பக புற்றுநோய் ஏற்படும். இந்த சமயத்தில் சினைப்பைப் புற்றுநோய் வரலாம் என பதிவுகள் கூறுகின்றன.
5. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சினைப்பை புற்றுநோய் இருக்கும் பட்சத்தில் இது பரம்பரை வழியாகவும் வரலாம்.
6. அதிகமான உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |