ஆரோக்கியமான விந்தணுவிற்கு ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்! அதிகமா சாப்பிட்டால் ஆபத்தாம்
வைட்டமின் சி சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் ஆரஞ்சு பழத்தின் நன்மைகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆரஞ்சு பழம்
தோடம்பழம் அல்லது ஆரஞ்சு பழம் என்பது சிட்ரஸ் x சினேசிஸ் (Citrus × sinensis) பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழம் ஆகும்.
செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள பழம் இது. இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன.
இது வெப்ப, மிதவெப்பப் பகுதிகளில் அதிகமாக விளைகிறது, ஆரஞ்சு மரம் குட்டையாக புதர்போன்று அடர்த்தியாக இருக்கும். மென்மையான இலைகளையும் சிறிய வெண்மை நிறப் பூக்களையும் உடையது.
இப்பூக்கள் ஒருவகை மணமுள்ளவை, ஆரஞ்சு என்பது ஒரு நிறத்தைக் குறிக்கும் பெயராக அமைந்திருப்பினும் ஆரஞ்சுப் பழங்கள் சிறு சிறு நிற வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன.
இதன் மேல் தோல் உள்ளே இருக்கும் பழச்சுளைகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். இதனால் பழத்தை எளிதாக உரிக்க இயலும். சுளையாகவும் சாப்பிடலாம். சாறாகப் பிழித்தும் அருந்தலாம்.
ஆரஞ்சுப் பழம் ஆண்டு முழுமையும் விளையக்கூடியது. ஒரு மரம் ஆண்டுக்குச் சராசரியாக ஆயிரம் பழங்கள் தரும்.
ஆரஞ்சுப் பழத்தின் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுகின்றன, இதன் மணமுள்ள பூக்களிலிருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. பழத்தோலிலிருந்து எண்ணெயும் பழத்திலிருந்து ஒருவகை மதுவும் தயாரிக்கிறார்கள்.
எலுமிச்சை, நார்த்தை (கடாரங் காய்), சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, பப்ளி மாஸ் ஆகிய பழங்கள் ஆரஞ்சு இன வகையைச் சேர்ந்தவைகளாக காணப்பட்டாலும், சில புளிப்பு சுவையை உடையது.
image: aujardin.info
ஊட்டச்சத்துக்கள்
100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 47 கிராம் கலோரிகள், 87 கிராம் தண்ணீர், 0.9 கிராம் புரதம், 11.8 கிராம் கார்போஹைட்ரேட், 9.4 கிராம் சர்க்கரை, 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது.
மேலும் நமக்கு தினசரி தேவையான அளவில் 76 சதவீதம் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. எனவே நாம் ஆரஞ்சு பழத்தை மிதமான அளவிலே தான் உட்கொள்ள வேண்டும்.
நன்மைகள் என்னென்ன?
புற்றுநோய்
ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.
சிறுநீரக நோய்கள்
தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க முடுயும். குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க்கரை போட வேண்டாம். ஏனெனில் அவை பற்களை சொத்தையாக்கிவிடும்.
கொலஸ்ட்ரால்
ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.
ஆரோக்கியமான இதயம்
ஆரஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள். மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ, அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.
நோயெதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.
நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு
ஆய்வு ஒன்றில் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் பொருள், உடலில் வைரஸ் நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கல்
ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும். பற்கள் வலுவாக வைத்திருக்க உதவுகின்றது.
கண் பார்வை
கரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருப்பதால், அதனை சாப்பிடும் போது, அது உடலில் வைட்டமின் ஏ சத்தானது மாறி, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கும்.
உயர் இரத்த அழுத்தம்
ஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, ஆரஞ்சுப் பழத்தில் நிறைந்திருப்பதால், அதனை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது குறைவதோடு, அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.
பொலிவான சருமம்
ஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் முதுமைத் தோற்றமும் தடைபடும்.
எடை குறைவு
ஆரஞ்சு பழத்தை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி, கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும். மூட்டு வலிக்கு நிவாரணம் கொடுப்பதுடன், விந்தணுக்களை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கின்றது.
பக்கவிளைவுகள் என்ன?
ஒருவர் தினமும் 4 முதல் 5 ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டால், அதனால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும். இது வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
மேலும் வைட்டமின் சியை அதிகமாக எடுத்துக்கொள்வது நெஞ்செரிச்சல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
சில தருணங்களில் வயிறு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. மேலும் உடலில் அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழம் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?
சிறு சிறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால், ஆரஞ்சு பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்றோ அல்லது தினமும் சாப்பிட உகந்ததும் அல்ல என்றோ நினைக்க வேண்டாம்.
தினமும் கூட கொஞ்சமாக ஆரஞ்சு பழம் எடுத்துக் கொள்ளலாம். அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 1 முதல் 2 ஆரஞ்சுகளை உட்கொள்ளலாம். அதற்கு மேல் உட்கொள்ளக்கூடாது.
image:shuterstock