ஆரஞ்சு பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடவேண்டும்?
பல பழங்களில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருந்தாலும், சில பழங்கள் தரும் சத்துக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். அந்த வகையில், ஆரஞ்சு பழத்தை வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தக்கூடியது என்பதால் குளிர் காலத்தில் சாப்பிடுவது தவறில்லை.
ஆனால் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட பிறகு ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது. மேலும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இவை குடலை சுத்தம் செய்து செரிமானத்தை அதிகரிக்க செய்யவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும். ஆரஞ்சு இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். இதயத்திற்கு சிறந்த டானிக்காகவும் கருதப்படுகிறது.
இரும்பு சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம். ஆரஞ்சு பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தக்கூடியது.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்வது, அமில வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் தொண்டையில் எரிச்சலை அதிகப்படுத்தும். இருமலையும் உண்டாக்கும்.
சாப்பிட உகந்த நேரம்?
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உணவு உட்கொண்ட பின்பு உடனே சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் அமிலம் உருவாகுவதை அதிகரித்துவிடும். இவை செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஊட்டச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கும். உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம்.