இரவு உணவை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்?
இரவு உணவை எப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நமது ஆரோக்கியமான வாழ்விற்கு உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம் ஆகும். குறிப்பாக இரவு உணவை உட்கொள்ளும் நேரத்தில் மிகுந்த கவனம் தேவை.
தூங்கும் முன்பு நாம் சாப்பிடும் நேரம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காகும். நமது உடல் சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm) எனப்படும் ஒரு உள்ளார்ந்த கடிகாரத்தின்படி செயல்படுகிறது.
இது தூக்கம், உடல் ஆற்றல், ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம் (Metabolism), செரிமானம் என ஒட்டுமொத்த உடலியல் அமைப்பையும் நிர்வகிக்கிறது.
இரவு உணவு
இரவில் தாமதமாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடும்போது, அதனை செரிமானம் செய்வதற்கு உடல் அதிக நேரம் போராட வேண்டியிருக்கும்.
குறிப்பாக, இரவில் தூக்கத்தின்போது ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் உடல் இந்த செரிமான வேலையை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
ஆதலால் இரவு உணவை எப்பொழுதம் 7 மணி அளவில் சாப்பிட்டு முடித்துவிட்டால், உணவு செரிமானம் ஆவதற்கும் போதுமான நேரம் கிடைப்பதுடன், உடலில் உள்ள கொழுப்பை சரி செய்து, அதிக கொழுப்பை எரிக்கவும் செய்யும்.
இரவு 9 மணிக்கோ அதற்கு பின்போ நாம் சாப்பிட்டால், வளர்சிதை மாற்றம் மெதுவாக நடப்பதுடன், கூடுதல் பசி உணர்வை ஏற்படுத்தி, அதிகமாக சாப்பிடவும் தூண்டுமாம். இதனால் சோர்வு ஏற்படும்.
எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை 7 மணிக்குள் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |