Optical illusion: 10 பேரில் ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும் - இதில் கோபமான எமோஜி எங்கே?
இணையத்தில் புதிய அம்சமாக ஒளியியல் மாயைகள் தற்போது இணையவாசிகளால் விரும்பப்பட்டு வருகின்றது.
மூளையை தூண்டச் செய்யும் இந்த படங்கள் நம் கண்களை ஏமாற்றி, நமது மூளை படங்களை எவ்வாறு செயலாக்குகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.
மேலும் இந்த ஒளியியல் மாயைகள் பார்வையாளர்களை தங்கள் கண்காணிப்பு திறன்களை சோதிக்க சவால் விடுகின்றன.
சமீபத்திய வைரலான ஆப்டிகல் மாயை பல எமோஜிகள் இருக்கும் கூட்டத்தில் ஒரு கோபமான எமோஜியை கண்டு பிடிப்பது தான்.
ஐந்து நொடிகள்
இந்த குறிப்பிட்ட ஒளியியல் மாயையில், எண்ணற்ற எமோஜிகளால் நிரப்பப்பட்ட ஒரு படத்தில் ஒரு கோபமான எமோஜி மறைந்துள்ளது. இதை கண்டுபிடிப்பது எளிமை. ஈனால் அதற்கு தந்திரம் கொஞ்சம் தேவை. இதில் நுணுக்கமான விவரங்களைக் கூர்மையாகக் கவனித்து, விரைவாகச் செயலாக்கும் திறன் உள்ளவர்கள், அந்த கோபமான எமோஜியை கண்டுபிடிப்பார்கள்.
கோபமான முகத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால் இதை பின்பற்றி பாருங்கள். எமோஜிகளின் முகபாவனைகளைக் கவனியுங்கள்.கூடுதலாக, படத்தை ஒரே நேரத்தில் பார்ப்பதற்கு பதிலாக பிரிவுகளாக பாருங்கள். மேலும், படத்தை இடமிருந்து வலமாக பார்க்காமல் , வெவ்வேறு கோணங்களில் பாருங்கள்.
நாங்கள் கொடுத்த குறிப்பை வைத்து அல்லது இதற்கு முன்னரே கண்டு பிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மிகவும் தந்திரமானவர். இது கண்டுபிடிக்காதவர்கள் கீழே படத்தில் விடையை காட்டியுள்ளோம் பாருங்கள். கோபமான எமோஜி படத்தின் மையத்தில் கீழே மறைக்கப்பட்டுள்ளது. கோபமான எமோஜி கீழ் வரிசையின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஒளியியல் மாயைகள், காட்சிகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்பதைக் குழப்பி, உங்கள் மூளையை ஏமாற்றுகின்றன. இந்த சவால்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு மதிப்புமிக்க கருவியாகும் .
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |