பேரதிர்ச்சி.. ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் திடீர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுள்ளது.
விஜயலட்சுமி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தார் . இதனை தொடர்ந்து இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. ஓ பன்னீர்செல்வம் மனைவியின் மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.