கட்சி அலுவலகம் யாருடையது? அலுவலகத்திற்கு சீல்.. ஓபிஎஸ் இபிஎஸ்சுக்கு வருவாய் துறை நோட்டீஸ்!
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இரு தரப்புக்கு இடையே கல் வீச்சு தாக்குதல் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தனர்.
இதனால், தொடர்ந்து இரு தரப்புக்கும் பதற்றமான சூழ்நிலை உருவாகி கொண்டிருக்கும் நேரத்தில், வருவாய் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், ஜூலை 11 ம் தேதி சுமார் 8.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற போது இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு. கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
அவர்கள் காவல்துறையினரைப் பணி செய்யாவிடாமல் தடுத்ததுடன், அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் கார்களைச் சேதப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்த போது அவர்களைக் கைது செய்து காவல்துறையினர் அவ்விடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 பேரும், மற்றும் ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்தனர்.

வருவாய் துறை நோட்டீஸ்
இதனால் இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு இது தொடர்பாக உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.
இந்த பிரச்சனையைடுத்து ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இரு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் பொது அமைதி பாதிக்கப்பட்டதால் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தென்சென்னை வருவாய் கோட்ட அலுவலர் அறிக்கை அளித்தார்.

மேலும், உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனில் இப்பிரச்சினை தீவிர சட்டம்-ஒழுங்குப் பாதிப்பையும், பொது அமைதியையும் சீர்குலைத்துவிடும் என்று
கருதியதன் அடிப்படையில் இன்று கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, ஜூலை 25-ம் தேதி இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் எனக் கூறி இருதரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.