சிறுநீரகப் பிரச்சனை தீரணுமா? அப்போ இந்த கோயிலுக்கு போங்க!
பொதுவாக மனிதர்களுக்கு வரும் அத்தணை பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு கோயில் தான்.
அந்த வகையில், மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகளை குணமாக்கி அவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும் கோயில்களும் தமிழகத்தில் இருக்கின்றன.
அதே போல் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்து கொண்டு நிம்மதியில்லாமல் இருந்தால் கோயில்களுக்கு சென்று வந்த பின்னர் அந்த பிரச்சினைகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.
அத்தகைய கோயில்களில் ஒன்று தான் “ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில்”. இந்த கோயில் பெரம்பலூர் - பாடாலூர் அருகே அமைந்துள்ளது.மேலும் கோயிலில் அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் இருக்கிறார்.
“அப்பர்” என அழைக்கப்படும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்த ஆலயத்தில் ஆசிய கண்டத்திலேயே அபூர்வமாக கிடைக்கும் பஞ்சநதன கல்லால் செய்யப்பட்ட “ பஞ்ச நதன நடராஜர்” சிலை உள்ளது.
இது போன்று ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயிலுக்கு சென்று வருவதால் வேறு என்னென்ன சிறப்புக்கள் உள்ளன? என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நம்பிக்கை
கோயிலில் பூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப் பெருமானுக்கு அருகாமையில் சிவகாமி அம்மையின் தரிசனம் இருக்கிறது. இதற்கு முறையாக பூஜைகள் செய்து வழிபட்டால் சிறு நீரகக் கோளாறுகள் நீங்கும் என அக்கோயிலின் பக்தர்கள் கூறுகின்றனர்.
நடராஜர் அபிஷேகத்தின் பலன்கள்
1. நடராஜருக்கு வெட்டிவேர் மாலையை அர்ச்சனை செய்த பின்னர் அக்குள்ள கிணற்றிலுள்ள நீரை எடுத்து அபிஷேகம் செய்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். இந்த பரிகாரத்தை சரியாக 48 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும்.
2. ஊட்டத்தூர் கோவிலில் செய்யப்படும் அபிஷேகத்தால் சிறுநீரக நோய் குணமானவர்கள் அங்கு வரும் பக்தர்களுக்காக சான்றுகளை விட்டு சென்றுள்ளனர்.
முக்கியத்துவம்
- சுத்த ரத்தினத்தின் இறைவன் என்பது தலைமைக் கடவுளான சுத்த ரத்னேஸ்வரரின் பெயரை குறிக்கின்றது.
- தெய்வம் தூய ரூபி கல்லால் செய்யப்பட்டுள்ளதால் ஆரத்தி செய்யும் பொழுது மின்னுவதைக் காணலாம்.
- இந்த கோயிலில் சிவபெருமானின் 275 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
- புகழ்பெற்ற 63 நாயன்மார்களால் எழுதப்பட்ட பாடல்கள், புராணங்களில் இந்த கோயிலின் வரலாற்றை காணலாம்.
- அன்று முதல் இன்று வரை சிறுநீரக பிரச்சினைக்கு மருந்தை தாண்டி ஒரு தீர்வு என்றால் அது இந்த நடராஜர் கோயில் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |