இறந்தவர்களின் நகைகள், உடைகளை அணிந்தால் என்ன நடக்கும்?
பொதுவாக மனித வாழ்க்கையில் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. உலகில் பிறந்த அனைவருமே ஒரு நாள் இறக்க தான் வேண்டும்.
இதன்படி, ஒருவர் இந்த உலகில் தன்னுடைய வாழ்க்கை முடித்த பின்னர் அவரின் ஞாபகம் என சிலர் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்திருப்பார்கள்.
இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்துவது சரியா? என்ற கேள்வி தற்போது பலரின் மனதில் வரும். இதற்கான விளக்கத்தை கருட புராணம் எமக்கு தருகிறது.
அந்த வகையில், இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்தலாமா? அவர்களின் உடைமைகளை என்ன செய்வது? என்பது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இறந்தவர்களுடைய நகையை அணியலாமா?
ஜோதிடத்தின்படி, தங்கம் சூரியனுடன் தொடர்புடையது. இதில் சூரியனின் ஆற்றல் அதிகமாக இருக்கும். இப்படி இருக்கும் பொழுது நீங்கள் இறந்தவர்களின் அணிகலன்களை அணியும் போது எதிர்மறையான ஆற்றல்களின் தாக்கம் இருக்கும்.
இது உயிருடன் இருப்பவர்களை பாதிக்கும்.
மேலும், மேற்குறிப்பிட்டவைகளை பின்பற்றாவிட்டால் உங்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமடைய ஆரம்பிக்கும். சூரியன் பலவீனமாக இருந்தால் உடல்நிலை, பண தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
நகைகளை அணிவதால் ஏற்படும் விளைவுகள்?
- இறந்தவர்களின் அணிகலன்களை அணிந்திருக்கும் பொழுது நமது உடலில் எதிர்மறையான ஆற்றல் அதிகமாக இருக்கும்.
- ஜாதகத்தில் சூரியன் ஆற்றல் பலவீனமாக இருக்கும்.
- வாழ்க்கையில் கஷ்டம், தொடர் பிரச்சினை உள்ளிட்டவைகள் நிகழும்.
- வியாபாரங்கள் செய்வார்கள் என்றால் இதன் தாக்கம் அவர்களின் வியாபாரத்திலும் இருக்கும்.
ஆடை அணியலாமா?
கருட புராணத்தின் படி இறந்தவர்களின் ஆடைகளை யாரும் அணியக் கூடாது. இறந்தவர்களின் ஆன்மாக்கள் ஆடைகளை அதிகமாக ஈர்ப்பை கொண்டிருக்கும்.
இதனை உயிருள்ள ஒருவர் அணியும் பொழுது எதிர்மறையான தாக்கம் அதிகமாக இருக்கும்.
இறந்தவர்களுக்கும் அவர்களின் உடைகளுக்கும் நெருங்கிய பினைப்பு இருக்கின்றது. இதனை என்ன செய்தாலும் தடுக்க முடியாது.
கருட புராணம் கூறும் விளக்கம்
கருடப் புராணத்தின் படி, இறந்தவர்களின் நகை அல்லது ஆடை அணிந்தால் அவர்களின் ஆன்மா சாந்தியடையாது. மாறாக நாம் பயன்படுத்தும் பொருட்களிலேயே அவர்களின் ஆன்மா இருக்கும். என கூறப்படுகின்றது.
மேலும் பித்ரு தோஷம் உண்டாகும். இறந்துபோனவர்களின் அணிகலன், ஆடைகளை ஞாபகமாக வைத்து கொள்ளலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் அதனை அணியக் கூடாது.
பரிகாரம்
சிலர் இறந்தவர்களின் புடவைகள், தாலி என்பவைகளை அணிய விரும்புவார்கள். இது போன்ற எண்ணம் உள்ளவர்கள் சுத்தமான கங்கை நீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
சில மந்திரங்களை சொல்லவும். இப்படி செய்து விட்டு அந்த பொருட்களை பயன்படுத்தலாம். இந்த பரிகாரம் பொருட்களுக்கும், இறந்தவர்களுக்கு இருக்கும் பிணைப்பை இல்லாமலாக்கும்.
அத்துடன் நகைகள் அணிய வேண்டும் என்றால் நகைகளை நன்றாக சுத்திகரிக்கப்பட வேண்டும். பின்னர் சில நாட்களுக்கு மஞ்சள் நூலால் கட்ட வேண்டும். இப்படி கட்டி சரியாக 21 நாட்களுக்குப் பிறகு அணியலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |