கடுப்பா நின்ற பிரியங்காவை குபீர்னு சிரிக்க வைத்த மா.கா.பா...என்ன செய்தார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் மகாபா ஆனந்த், பிரியங்கா இணைந்து வழங்கும் புதிய கேம் ஷோ 'ஊம் சொல்றியா ஊஹும் சொல்றீயா.
இந்த வார நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜா கலந்து கொண்டார்.
கடந்த வாரத்தினை விறுவிறுப்புடன் சென்ற நிகழ்ச்சியில் பிரியங்காவை சிரிக்க வைக்க மா.கா.பா செய்த காமெடி சுஜாவை ஷாக்காகிவிட்டது.

புதிய, புதிய கேம் ஷோக்களை நடத்துவதில் புகழ் பெற்ற விஜய் தொலைக்காட்சியில் அடுத்த புதிய கேம் ஷோ தொடங்கி உள்ளது.
இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்க உள்ளனர். ஏற்கெனவே இவர்கள் இருவரும் 'சூப்பர் சிங்கர்', 'தி வால்', 'சவுண்ட் பார்ட்டி' உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளனர்.
மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ‘ஊம் சொல்றியா ஊஹூம் சொல்றீயா’ என்ற 'புஷ்பா' படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் வரிகளில் ‘Oo Solrya Oohm Solriya Yes or Miss’ என்ற டைட்டிலுடன் வித்தியாசமான கேம் ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.