கடைகளில் வாங்கும் சுவையில் வெங்காயம் வடகம்! இந்த நுட்பம் தெரிந்தால் போதும்
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
மாலைநேரத்திற்கு சூடான டீ உடன் சுவையான ஸ்நாக்ஸ் இருந்தால் ஏதுவும் கூறாமல் அவர்களின் வேலைகளை செய்வார்கள்.
ஆனால் இவைகள் இல்லாத பட்சத்தில் சற்று குழம்புவார்கள். இவர்கள் மட்டுமல்ல வீட்டிலுள்ள பெரியவர்களும் இப்படி தான் நடந்து கொள்வார்கள்.
அந்த வகையில் கடைகளில் வாங்கும் வெங்காய வடகம் எப்படி வீட்டில் செய்து அசத்தலாம் என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 2 கிலோ
- வெள்ளை முழு உளுந்து - 200 கிராம்
- பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
- வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லித்தழை - 1 கட்டு
- கறிவேப்பிலை - ஒரு சிறிய கப் அளவு
கரகரப்பாக அரைக்க தேவையான பொருட்கள்
- மிளகாய் வத்தல் - 10
- சீரகம் - 2 மேசைக்கரண்டி
- பூண்டு - 1 பெரியது
தயாரிப்பு முறை
முதலில் வெங்காய வடகம் செய்ய தேவையான வெங்காயங்களை தோல் நீக்கி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை ஒரு பவுலில் போட்டு சுமார் 4 மணி நேரம் உலர விடவும்.
இதனை வெட்டிய பின்னர் உளுந்தம் பருப்பை எடுத்த தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் இதற்கு தேவையான காய்கறிகளை வெட்டி வைக்கவும்.
வெங்காய வடகத்திற்கு காரம் மிகவும் முக்கியம் ஆகையால் மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனை தொடர்ந்து பருப்பையும் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பருப்பு கையில் அகப்படும் அளவிற்கு அரைத்தால் போதும்.
அரைத்து மாவுடன், வெங்காயம், கடுகு, பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை கொடுத்து அளவில் சேர்ந்து பிசைந்து கொள்ளவும்.
கைகளில் தண்ணீர் நனைத்து கொண்டு சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும்.
பின்னர் ஒரு பேப்பரில் பரப்பி காய வைக்க வேண்டும். சுமார் 2 நாட்களில் வடகம் காய்ந்து சுவையாக மாறிவிடும். இதனை ஒரு காற்று உட்போகாத போத்தலில் போட்டு வைத்தால் சுவையான வெங்காயம் வடகம் தயார்!