ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாத வெங்காய தொக்கு! அரை நொடியில் எப்படி தயார் செய்வது?
ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாத சுவையான வெங்காய தொக்கு ரெசிபி, எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 10 முதல் 15
- கடுகு - ஒரு டீஸ்புன்
- தனியா – ஒரு டீஸ்புன்
- வெந்தயம் – ஒரு டீஸ்புன்
- பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் -5 டீஸ்புன்

செய்முறை
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
பிறகு கடுகு போட்டு தாளித்து பின் இந்த நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில், சிறிது கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் அளவுக்கு தனி மிளகாய் தூள் சேர்த்து அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு, இதனுடன் ஒரு எலுமிச்சை பழ அளவு புளி கரைசல் சேர்த்து கொள்ளுங்கள். மூன்றும் சேர்ந்து நன்றாக நிறம் மாறி வதங்கி சுருண்டு வந்தவுடன், அரைத்து வைத்துள்ள பவுடரை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே சிம்மில் வைத்து வதக்கி விடுங்கள்.
இறுதியாக சிறிது வெல்லம் தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான வெங்காய தொக்கு ரெடி.