நெஞ்செரிச்சலா? Omeprazole மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நெஞ்செரிச்சல், வயிற்றில் அதிக அமிலச்சுரப்பால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் வயிற்றில் புண் போன்றவற்றை குணப்படுத்த Omeprazole மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாத்திரைகள் நம் உடலின் அமிலச்சுரப்பை குறைப்பதால் செரிமானத்தை ஒழுங்குப்படுத்தி நெஞ்செரிச்சலை குணமாக்குகிறது.
பக்கவிளைவுகள்
வயிற்றுப்போக்கு
தலைவலி
மயக்கம்
வாந்தி
அடிவயிற்றில் வலி
நீண்ட காலத்துக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய மருந்துகளில் Omeprazole ஒன்று.
வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலியாக குறையாதபட்சத்தில் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.
இந்த மருந்தை எடுத்துக்கொண்ட 14 நாட்களில் குணமாகவில்லையென்றாலும் மருத்துவரை பார்த்துவிடுங்கள்.
அதிக நாட்கள் தொடர்ந்து Omeprazole மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் எலும்புகள் பலவீனமாகலாம், சிறுநீரக நோய்களும் வரக்கூடும்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
எந்தவொரு மருந்தையும் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக வேறு ஏதேனும் நோய்க்கு மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் மருந்துகளில் nelfinavir இருந்தால் இதனை பயன்படுத்த வேண்டாம்.
கல்லீரல் தொந்தரவுகள், கருப்பு நிறத்தில் மலம் கழிக்கும் தொந்தரவு இருப்பவர்கள், காரணமில்லாமல் உடல் எடை குறைந்தால், விழுங்குவதற்கு சிரமம் இருந்தால் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
எடை 10கிலோகிராமுக்கும் குறைவாகவுள்ள குழந்தைகள் மற்றும் 1 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இதை கொடுக்கக்கூடாது.
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது.
கால்சியம் சத்து உடலில் உறிஞ்சுக்கொள்வதை Omeprazole மாத்திரைகள் தடுக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.
Image Credit: P Stock / Shutterstock.com
மூன்று மாதங்களுக்கு இதனை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வேமேயானால், மெக்னீசியம் சத்தின் அளவு நம் உடலில் குறையத்தொடங்கும், இதன் காரணமாக எப்போதுமே சோர்வாகவும், குழப்பமான மனநிலையுடன் இருப்பீர்கள், அதையும் மீறி தொடர்ந்து பயன்படுத்தினால் விட்டமின் பி 12 குறைபாடு வரலாம்.
கார்டியாக் நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப்படி Omeprazole மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம், அதற்கு முன்பாக கார்டியாக் நோய்களுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்கவும்.