மைனா நந்தினி எப்படி வெள்ளையாக மாறினார் தெரியுமா? அவர் கொடுத்த Beauty tips
கருப்பாக இருந்த சின்னத்திரை நடிகை மைனா நந்தினி எப்படி வெள்ளையாக மாறினார் என்பதற்கு அவரே விளக்கம் கொடுத்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
மைனா நந்தினி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நந்தினி.
இவர் இந்த சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால், அதன் பின்னர் அவருடைய பெயருக்கு முன்னாள் மைனா என சேர்த்துக் கொண்டார்.
சின்னத்திரையை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர், வெள்ளத்திரை பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்த நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
வெள்ளையாக மாறியது இப்படி தான்..
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 6-ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தார். தற்போது மைனா விங்ஸ் என்கிற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
இவ்வளவு பல சாதனைகளை செய்த மைனா நந்தினி சின்னத்திரையில் இருக்கும் கொஞ்சம் கருப்பாக இருந்தார். வெள்ளத்திரைக்கு சென்ற பின்னர் வெள்ளையாக மாறியது மட்டுமல்லாமல் பளபளப்பாகவும் இருக்கிறார்.
இது குறித்து பேசிய நந்தினி,“ எல்லாரும் என்னிடம் முன்னர் கருப்பாக இருந்த நந்தினி எப்படி வெள்ளையாக மாறினார் என கேள்வியெழுப்பி வருகிறார்கள். வெள்ளையாக மாற நான் ஆரம்ப காலங்களில் நிறைய க்ரீம்கள் பயன்படுத்தினேன். அதனால் நிரந்தரமான தீர்வை கொடுக்க முடியாது என தெரிந்து கொண்டு, முறையான சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை கடைபிடிக்க ஆரம்பித்தேன்.
அதன் பின்னர், முகத்திற்கு வெளியில் இருந்து எதுவும் போடாமல் கரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை பானமாக எடுத்துக் கொள்ள முடிவு செய்து அடிக்கடி எடுத்துக் கொண்டேன்.
அதற்கு முன்னர் காலையில் எழுந்தவுடன் நன்றாக தண்ணீர் குடிப்பேன். இது மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்கிறது. அதன் பின்னர் தான் வெள்ளையாக மாறியது என்னுடைய சருமம்..”என பேசியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |