ஹீரோயின் போல் மாறிய குஷ்பு மகள்- சினிமாவுக்காக இதை செய்தாரா?
நடிகை குஷ்பூ மகளான அவந்திகா டாட்டூக்கள் இல்லாமல் வெளியிட்ட புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குஷ்பூ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ.
இவர், தற்போது சினிமாவில் வாய்ப்பக்கள் குறைவாக இருந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சின்னத்திரையில் சீரியலில் ஒன்றில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், இயக்குநர் சுந்தர் சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூவிற்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள்.
பார்ப்பதற்கு குஷ்பூ போன்று இருக்கும் அவருடைய இரு மகள்களும் வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு, பெற்றோர் இணைந்து சினிமாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
டாட்டூ இல்லாமல் வெளியான படங்கள்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவந்திகா உடல் எடை குறைத்து, டாட்டூக்கள் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் தன்னுடைய வாழ்க்கையில் நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் விடயங்களை உடலில் டாட்டூவாக போட்டியிருந்தார் என்பதை அறிவோம்.
இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அவந்திகாவின் பளபளப்பு, கிளாமர் லுக் படங்களை பார்த்த இணையவாசிகள், “ குஷ்பூவை மிஞ்சிய அழகு..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |