தினமும் சிறிது ஓம வாட்டர் குடித்தால் என்ன நடக்கும்? கண்கூடாக தெரியும் மாற்றம்
ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும்.
இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. இந்த அற்புத மூலிகை பொருள் ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது.
ஓமம் விதை வடிவில் உலர்த்தப்பட்ட தாவரத்தின் பழமாகும். இதில் இருக்கும் தைமால் எனப்படும் அத்தியாவசிய எண்ணெயின் பல ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது.
தேவையான பொருட்கள்:
பெருஞ்சீரகம் விதைகள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 அங்குலம்
ஓமம் தண்ணீன் நன்மைகள்:
இருமல் சளி பிரச்சினைக்கு ஒரு ஸ்பூன் ஓம விதையுடன், துளசி இலைகளை வேகவைத்து சாற்றை குடித்தால் குணமாகும்.
தினமும் சிறிதளவு ஓம தண்ணீரை பருகினால் அது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றுகின்றது.
பாக்டீரியாக்கள் மற்றும் ஆன்டி – பாக்டீரியல் மற்றும் பூஞ்சைகளின்
வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் உள்ளதால் அது தொற்று
நோயிலிருந்து பாதுகாக்கிறது.
இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கலானது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவும்.
காது வலிகளுக்கு உற்ற தீர்வாக ஓமம் எண்ணெய் பயன்படுகின்றது. பல்வலியில் இருந்து நிவாரணம் பெற ஓம விதையுடன் உப்பை சேர்த்து கொப்பளிக்கவும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஓம விதைகளை வேகவைத்து சாறை பருகி வந்தால்கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கல் மற்றும் வீக்கமானது குறையக்கூடும்.
கருப்பை மற்றும் வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
வெறும் வயிற்றில் ஓம தண்ணீரை குடித்து வருவதினால் ஜீரணத்தை சீராக்கக்கூடும். நீங்கள் அதிகமாக சாப்பிட்டால் ஓம நீரை பருகினால் சரிமானம் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |