கணவராக நினைத்து நாகப் பாம்புடன் குடும்பம் நடத்திய பெண்! அதிர்ச்சியில் உறைந்த கிராமவாசிகள்
இறந்த கணவர் நாகப் பாம்பு உருவில் வந்துள்ளதாக கூறி பெண் ஒருவர் நான்கு நாட்களாக நாகப் பாம்புடன் வாழ்ந்த சம்பவம் கடும் பீதியை கிளப்பி வருகின்றது.
பெங்களூரு - கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த மானஷா என்ற பெண்ணே இப்படி பாம்புடன் வாழ்ந்துள்ளார்.
மானஷாவின் கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மானஷாவின் வீட்டுக்குள் ஒரு நாகப் பாம்பு புகுந்துள்ளது.
மானஷா நாகபாம்பை வீட்டுக்கு வந்ததும் இறந்துபோன கணவர் மறுபிறவியாக நாகப் பாம்பாக வந்திருப்பதாக கருதி அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார்.
பாம்புடன் குடும்பம் நடத்திய பெண்
4 நாட்களாக அந்த பாம்புடனே அவர் தங்கியும் இருந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மானஷா தனது கணவர் தான் பாம்பு உருவில் வந்துள்ளார். அவருடன் வாழ்ந்து வருவதாக கூறி பாம்பை பிடிக்கக் கூடாது என்று சண்டை போட்டுள்ளார்.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
என்னதான் நாகரீகம் வளர்ந்து கொண்டு போனாலும் ஒரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்து காட்டு.