3500 வருட பழங்கால கரடி உடல் கண்டுபிடிப்பு! உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்
ஆர்ட்டிக் பகுதியிலுள்ள ஒரு தீவில் சுமார் 3,500 வருடங்களுக்கு முன்பிருந்த கரடியொன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சைபீரியாவின் உறை பனியால் குறித்த கரடியின் உடல் அப்படியே காணப்படுகின்றது. குறித்த கரடியின் உடலானது, ஒரு விஞ்ஞானிகள் குழுவால் பரிசோதிக்கப்பட்டது.
'ஒரு பழங்கால பழுப்பு கரடியின் முழுமையான சடலம் இது' என்று வடகிழக்கு ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் லாசரேவ் மம்மத் அருங்காட்சியக ஆய்வகத்தின் ஆய்வகத் தலைவர் மாக்சிம் செப்ராசோவ் தெரிவித்துள்ளார்.
சைபீரியாவில் உள்ள விஞ்ஞானக் குழு அந்தக் கரடியின் கடினமான தோலை முழுவதுமாக அகற்றி, அதன் மூளை, உள் உறுப்புக்களை ஆய்வு செய்து, நுண்ணுயிரியல், வைரஸ், மரபணு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தக் கரடிக்கு சுமார் 2-3 வயது இருக்கலாம். அதன் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே அது உயிரிழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.