மனிதர்களின் இடத்திற்கு வந்த மிக அரிய வகை கருப்பு கரடி! வைரலாகும் வீடியோ
இமயமலையில் உள்ள கருப்புக் கரடி மனிதர்கள் வசிக்கும் இடத்தில் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது சமூகவலைத்தள பக்கத்தில் இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்.
அதனை மீட்பு குழுவினர் உதவியோடு பிடித்து, பாதுகாப்பாக கூண்டில் அடைத்து காயம் ஏதும் இல்லாதவாறு வனத்திற்குள்ளே மீண்டும் விட்டுள்ளனர்.
That is how freedom looks like. Yesterday’s rescue & release of a Himalayan black bear. Team. pic.twitter.com/aMGQoQr87u
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) December 4, 2021
கரடி அதன் இயற்கையான வாழ்விடத்திற்கு விடுவிக்கப்பட்ட பிறகு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் பர்வீன் கஸ்வான் சமூகவளைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இமயமலை கருப்புக் கரடி இந்திய இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஆசிய கருப்பு கரடியின் துணையினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.