திடீரென தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! அதிர்ச்சி கொடுத்த காணொளி
புனே நகரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபலமாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
இன்று மக்களிடையே அதிகமாக பிரபலமாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். நேற்றைய தினத்தில் தமிழகத்தில் எலெட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து தந்தை மகள் பலியாகினர். இந்நிலையில் தற்போது பூனே பதிவு எண்ணைக் கொண்ட ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்துள்ளது.
குறித்த காணொளியில் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த ஓலா S1 ப்ரோ மாடலில் மெல்ல புகை கிளம்பி வெளியேறியது. பின் ஸ்கூட்டர் வெடித்து முழுமையாக தீப்பிடிக்க துவங்கியது.
இந்த ஸ்கூட்டரை பயன்படுத்திய வாடிக்கையாளருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று ஓலா எலெக்டரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா! வைரலாகும் குழந்தையின் புகைப்படம்
ஸ்கூட்டர் ஏன் தீப்பிடித்தது:
இதுகுறித்து ஓலா கூறுகையில், "பூனேவில் எங்களின் ஸ்கூட்டர் ஒன்றில் ஏற்பட்ட சம்பவம் குறித்து தகவல் எங்களுக்கு வந்தடைந்தது. ஸ்கூட்டர் ஏன் தீப்பிடித்து எரிந்தது என்ற காரணத்தை ஆய்வு செய்யும் பணிகளை துவங்கி இருக்கிறோம். அடுத்த சில நாட்களில் இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி அதிக தகவல்கள் வெளியாகும்."
"இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளருடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார். ஓலாவை பொருத்தவரை வாகன பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். எங்களின் பொருட்கள் அனைத்தும் அதிக தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறோம்.
இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, தேவையான நடவடிக்கையை தொடர்ந்து எடுப்போம். இதுபற்றி கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும்," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.