உங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கின்றீர்களா...
பொதுவாகவே வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு உண்டு. குழந்தைகளோடு குழந்தைகளாக செல்லப்பிராணிகளும் ஒரு குழந்தையைப் போலவே வளர்ப்பார்கள்.
அதற்கான உணவு, வெளியில் செல்லுமிடத்துக்கு அழைத்துச் செல்லல் போன்று அதன் மீது இருக்கும் அக்கறைக்கும் அன்புக்கு அளவே இருக்காது.
image - youth incorporated magazine
தொழில் விட்டு வீடு வந்து சேர்ந்தவுடன் அவற்றுடன் நேரம் செலவழிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றே. ஆனால், அந்த நேரத்தில் நாம் செய்யும் சில தவறுகள் நம்மை மாத்திரமல்ல நமது செல்லப் பிராணிகளையும் பாதிக்கும்.
image - Animal medical hospitel
கைகளால் உணவளித்தல்
நாம் கைகளாலோ அல்லது கரண்டியினாலோ உணவளிக்கும்போது அது மனிதர்கள் உண்ணும் உணவைக் கேட்டுகும் வாய்ப்புள்ளதாகவும் நமது கைகளினால் அவற்றுக்கு உணவளிப்பது அவ்வளவு நன்மையானதாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.
உமிழ்நீர்
செல்லப்பிராணிகள் நம்மை கொஞ்சும் போது அதன் உமிழ்நீரிலிருந்து வெளிவரும் பக்டீரியாக்கள் மனிதர்களுக்கு பலவிதமான தோல் நோய்கள், எரிச்சல், ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.
அதுமாத்திரமின்றி நாய்களின் மேல் உள்ள முடிகளில் பல பக்டீரேியாக்கள், உண்ணிகள் என்பவவையும் காணப்படுகின்றன. இது மனிதர்களுக்கு சரும நோய்களை ஏற்படுத்தவல்லது.
image - The washington post
அழகுசாதனப் பொருட்களை நக்குவது
செல்லப்பிராணிகள் நமது முகம் மற்றும் உதட்டை நக்கும்போது, நாம் உபயோகப்படுத்தியிருக்கும் க்ரீம் மற்றும் உதட்டுச் சாயத்தையும் சேர்த்தே நக்குகின்றது.
இது அவற்றின் வயிற்றில் நச்சுத்தன்மையை கலப்பதோடு தொற்றையும் ஏற்படுத்தும்.
இவ்வாறு தொற்று மற்றும் பக்டீரியாக்களை எவ்வாறு தவிர்ப்பது?
- செல்லப் பிராணிகளுக்கு பல் பரிசோதனை செய்வது, தடுப்பூசி போடுவது போன்ற பராமரிப்புக்கள் அவசியம்.
- கிருமிகளை அழிக்கக்கூடிய சவர்க்காரங்களை உபயோகப்படுத்தல்.
- வெளியில் அழைத்துச் சென்று வீடு திரும்பியவுடன் அவற்றின் பாதங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
- கட்டில்களில் செல்லப்பிராணிகள் ஏறினால், அவற்றை உரிய முறையில் சுத்தம் செய்துவிடுங்கள்.
image - Awareness days