தினமும் காலை எண்ணெயில் வாய் கொப்பளித்தால் கிடைக்கும் நன்மைகளை என்ன தெரியுமா?
தினமும் காலை ஆயில் புல்லிங் செய்வதினால் உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகிவிடும் என்று கூறப்படுகின்றது.
இப்பொழுது உள்ள ஆரோக்கிமற்ற வாழ்க்கைமுறையில் ஒருவர் தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முறை ஆயில் புல்லிங் செய்வதினால் உடல் நலத்தை காக்கும்.
அந்தவகையில் இந்த ஆயில் புல்லிங் செய்வது எப்படி? ஆயில் புல்லிங் செய்வதினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
எப்படி செய்வது?
காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான்.
சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு, அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டு டம்ளர் அளவு குடிக்க வேண்டும். பிறகு ஆயில் புல்லிங் செய்வது நல்லது.
நன்மைகள்
- மூலம், மூட்டு வலி, முழங்கல் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத் தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்கள் குறைந்து விடுகிறது.
- வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளுக்கு தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்கள் கறைகள் நீங்கி, பற்கள்வெள்ளையாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.
- தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நார்றம் அடிக்காமல் இருக்கும்.
- ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். பல் கூச்சம் நின்று பல்வலி மறையும்.
- ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். ஒற்றை தலைவலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.
குறிப்பு
ஆயில் புல்லிங் செய்யும் போது, ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம்.
இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும், பயப்பட வேண்டாம். வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாள் ஒன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதை செய்ய வேண்டும்.
