இலங்கையின் வசீகரிக்கும் காட்டு வழி பயணம்!! மிஸ் பண்ணாம போயிடுங்க
அழகும் வனப்பும்மிக்க தேசங்களில் ஒன்று இலங்கை. நாட்டின் தென்பகுதியில் பொன்னிற கடற்கரைகளையும், மத்திய பகுதி பசும் மலைகள், மழைக்காடுகளையும் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் முத்து என்று இலங்கை அழைக்கப்படுகிறது.
அதன் செழிப்பு, பன்முக கலாசாரம் ஆகியவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.
இதன் சிறப்புமிக்க பூலோக ரீதியான அமைப்பால், பல நூற்றாண்டுகளாக வர்த்தகங்கள், பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்கி வருகிறது.
இலங்கை ஓஹியாவிலிருந்து ஹட்டன் சமவெளி காட்டுப்பயணத்திற்கு தயாராகுவோம்
ஓஹியாவிலிருந்து ஹட்டன் சமவெளி வரையிலான பாதைகள் இலங்கையின் அழகிய மலைப்பாதைகளில் ஒன்று. இந்த மலை அழகிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக திகழ்கிறது.
பெலிஹுலோயாவிலிருந்து ஓஹியாவுக்கு செல்ல நடைப்பாதை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மலைப்பாதையில் நடக்கும்போது ஆச்சரியமூட்டும் பல விசித்திரமான இயற்கை காட்சிகளை நாம் பார்க்கலாம்.
இந்த மலைப்பயணம் நம் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமாக கண்டிப்பாக மாறும். ஏனென்றால் இயற்கை அழகு நம் கண்களில் எத்தனை அழகாக காட்சி தரும் தெரியுமா?
சுமார் 23 கி.மீ தூரம் வரை இந்த நடைப்பயணம் இருக்கும். ஆனால் இந்த மலைப்பாதைக்கு ஒரு குறுக்கு வழியும் இருக்கு. இந்த குறுக்கு வழியில் சென்றால் மொத்த தூரம் 8 கி.மீ ஆக குறைக்கலாம்.
பெலிஹுலோயாவிலிருந்து ஓஹியாவுக்கு செல்கின்ற குறுகிய இந்த பாதை கலுபஹானவிலிருந்து தொடங்குகிறது.
இந்த நடைப்பாதையில் செல்லும் போது பழைய பாழடைந்த எஸ்டேட் சாலைகள், பல மர தோட்டங்கள், பூந்தோட்டங்கள் என்று அப்பப்பா என்ன அழகு. இந்த வழியாகச் சென்றால்தான் ஓஹியாவில் இந்த நடைப்பாதை பயணம் முடிவடையும்.
இந்த பாதையில் நீங்கள் கால்நடையாகவும் மற்றும் வாகனங்கள் மூலமூம் பயணம் செய்யலாம். நீங்கள் நடக்கத் தேர்வுசெய்தால், தூரத்தில் நீல மலைகள், சிறிய நீரோடைகள் மற்றும் இலங்கையின் தெற்கு சமவெளிகளின் விசித்திர காட்சிகள் உட்பட இன்னும் பல கண்களுக்கு விருந்தளிக்கும் பல ரம்மியமான காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
பாதை வழிகள் மிகவும் மோசமாக இருக்கும், இந்த நடைப்பயணம் மேற்கொள்ளும்போது தேவையான தண்ணீர், உணவுப்பொட்டலகங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
வாகனம் மூலம் பயணம் செய்ய விரும்பினால் 4 wheel வாகனம் அல்லது பைக்கில் பயணம் செய்யலாம். வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் கவனத்தோடு நிதானமாக ஓட்ட வேண்டும். ஏனென்றால் இந்த பாதைகள் சற்று கரடுமுரடாக இருக்கும். கால்நடை பயணம் தான் மிகவும் சிறந்த பயணமாக இருக்கும்.
இந்த பயணத்தின் முதல் மற்றும் முக்கிய அம்சம் என்னவெனில் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பகந்த நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா காட்சியை கண்ட பிறகு நீங்கள் அந்த இடத்தை விட்டு வருவதற்கே மனம் வராது.
அந்த அளவுக்கு அந்த நீர்வீழ்ச்சி உங்கள் மனதை கவர்ந்து விடும். மறுபடியும் மறுபடியும் இந்த இடத்திற்கு வந்து போக இந்த நீர்வீழ்ச்சிகள் உங்கள் எண்ணத்தை தூண்டும்.
இந்த நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு சற்று தூரம் சென்றதும் நீங்கள் பழங்குடியினர் வாழ்கின்ற ஒரு அழகான சாலையில் நுழைவீர்கள்.
இங்குள்ள கிராம மக்கள் தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்பவர்கள். அவர்களிடம் நீங்கள் எந்த உதவி கேட்டாலும் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
பின்னர் சாலையில் பயணிக்கும்போது சாலைகள் கிரானைட் துண்டுகளால் இருப்பதால் இதன் மேல் பகுதி சற்று வழுக்கும். ஆனால் இதை கடந்து சென்று விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு முழுமையான இயற்கை சொர்க்க பூமிக்கே நுழைந்துவிடுவீர்கள். அங்கு மத்திய மலைகளின் தெற்குப் பகுதியில் கண்கவர் காட்சி உங்களை பிரமிப்பூட்டும்.
பனிமூட்டம் நிறைந்த அழகிய வனாந்தரங்கள் உங்கள் பார்வையை பறிக்கும். அப்பப்பா என்ன ஒரு அழகான இடம் என்று வர்ணிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.