இன்றைய தங்கம் விலை! தொடர்ந்து சரிவை நோக்கி செல்லும் தங்கம்
தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்த நிலையில் இன்று தடாலடியாகக் குறைந்து சவரன் ரூ.37ஆயிரத்துக்குள் சரிந்தது.
தங்கம் இன்றைய விலை
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,768 ஆகவும், சவரன், ரூ.38,144 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 28 குறைந்து ரூ.4,740ஆகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.244 சரிந்து, ரூ.37,920ஆக அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. கடந்த வியாழன், வெள்ளி இரு நாட்களில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று திடீரெனச் சரிந்துள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு 10 காசுகள் அதிகரித்து, ரூ.60.40ஆகவும், கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.60,400 ஆகவும் உயர்ந்துள்ளது