OCD Symptoms: OCD என்றால் என்ன? அதன் அறிகுறிகள் பற்றிய முழுமையான விளக்கம்
ஓசிடி நோய் தொடர்பில் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் காணப்படுகின்றது. ஆனால் பெரும்பாலானவர்கள் மத்தியில் இந்த நோய் குறித்து சரியான முழுமையான புரிதல் இல்லை என்பதே உண்மை.
சர்வதேச ஓசிடி பவுண்டேஷனின் அறிக்கையின் பிரகாரம் இது ஒரு மனநல சம்பந்தப்பட்ட குறைபாடு என்று குறிப்பிடப்படுகின்றது. இந்தநோய் நிலை வயது வித்தியாசம் அற்றது. இது சிறுவதினருக்கும் ஓசிடி ஏற்படலாம்.
ஓசிடி நோய் என்றால் என்ன?
Obsessive-compulsive disorder (OCD) என்பது பெரு விருப்ப கட்டாய மனப்பிறழ்ச்சி அல்லது எண்ண சுழற்சி நோய் என அடையாளப்படுத்தப்படுகின்றது.
பொதுவாக சுத்தமாக இருப்பதும், கைகளை கட்டாயமாக கழுவ வேண்டும் என்பதும் இந்த நோயின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.
ஆனால் இதை தான் பலரும் ஓசிடி நோய் என நினைக்கின்றார்கள். ஆனால் அவை தவிர ஏராளமான அறிகுறிகள் வகைப்படுத்தப்படுகின்றன.
இந்த ஒசிடி நோய் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது நபருக்கு நபர் வேறுப்படுகின்றது.
அதாவது ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதும், அவ்வாறு செய்வதிலிருந்து விடுபட நினைத்தாலும் தன்னாலேயே தன்னை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதும் ஓசிடி நோய் தாக்கம் ஆகும்.
இந்த ஓசிடி நோயானது ஒருவரின் குணாதிசயம் அல்லது தனிப்பட்ட ஒழுக்கத்துடன் தொடர்புடையது அல்ல. இது ஒருவரின் மனநலம் சம்பந்தப்பட்டது. உலகளாவிய ரீதியில் அதிகளவான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள்
குறிப்பாக சில செயல்களை அவர்கள் திரும்பத் திரும்ப செய்வதன் மூலமும் மற்றும் தங்கள் எண்ணங்களை கட்டுப்பாட்டில் வைக்க முடியாத நிலையில் தங்களின் எண்ண சுழற்சியுடன் பேராடிக்கொண்டிருப்பார்கள்.
ஓ. சி. டி பிரச்சனை இருப்பவர்கள் ஒரு நடத்தையை மீண்டும் மீண்டும் செய்துக்கொண்டிருப்பார்கள். உதாரணமாக கைகளை கழுவிய பின்னர் மீண்டும் கழுவுவது, கதவுகள் பூட்டிருக்கா என்று அடிக்கடி பரிசோதித்து பார்ப்பது, பொருட்களை பதுக்கி வைத்து மகிழ்சி கொள்வது, பொருட்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளதான என்பதை அடிக்கடி உறுதி செய்வது போன்றன ஓ. சி. டியின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கின்றது.
அவ்வாறான அறிகுறிகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் உண்மையில் ஓ. சி. டி பிரச்சினையில் வாழ்வது கடினம். இது கவலை மற்றும் மனநல பாதிப்பை அதிகரிக்கின்றது.
ஓ. சி. டி பிரச்சனை இருப்பவர்கள் தங்களுக்கென்று சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அதனை பின்பற்றுவதற்காக அதிகமாக போராடுவார்கள்.
இவர்கள் வகுக்கும் விதிகள் பெரும்பாலும் கடுமையான மற்றும் சர்வாதிகாரமானவை. ஒவ்வொரு நாளும் சில வகையான உணவுடன் ஒட்டிக் கொள்வது விசித்திரமான முறையில் சாப்பிடுவது, ஒரு உணவை தொடர்ந்து சாப்பிடுவது அல்லது ஒரு உணவை காரணமின்றி ஒதுக்கி வைப்பது போன்ற விதிகளை தாங்களாகவே வகுத்துக்கொள்வார்கள்.
ஓ.சி.டி உள்ளவர்களை கவனித்துப் பார்த்தால், சில குறிப்பிட்ட உணவுகளை எக்காரணம் கொண்டும் தொட மாட்டார்கள். சிலவற்றை காரணமே இல்லாமல், பசி இல்லாமல் கூட சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
வீட்டுக்குள்ளே, ஒரே அறைக்குள்ளாக அடைந்து கிடப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஓ. சி. டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளியில் செல்ல விரும்ப மாட்டார்கள்.
வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.அதையே செய்துக்கொண்டிருந்தாலும் திருப்தியடைய மாட்டார்கள்.
இவர்களுக்கு சமூக வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும். மேலும் அவர்களை வீட்டிற்குள் கட்டிப் போட்டு வைக்கும். வெளியிடங்களும் மற்ற சத்தங்களும் இவர்களுக்கு எரிச்சலை கொடுக்கும். இதனால் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு மன அழுத்தப்பிரச்சினைக்கும் ஆளாக கூடும்.
ஓ. சி. டி பிரச்சனைக்கு சிறந்த தீர்வு உங்கள் எண்ணங்கள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தால், சாதாரணமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் எண்ணங்களைக் கட்டுப்பாட்டில் வைக்க முயலுங்கள். திட்டமிட்டு அதன்படி செயல்பட முயலுங்கள்.
ஏனெனில் ஓ. சி. டி உங்கள் நேரத்தைச் வீணாக்கி உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் வாய்ப்பு அதிகம் இதனை புரிந்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய எண்ணங்களில் இருந்து வெளிவர முயற்ச்சிக்க வேண்டும்.
முறையான தியானப் பயிற்சிகள் மூலம் இதைச் சரி செய்ய முடியும். சிலருக்குக் counseling ம் தேவைப்படும் என்றாலும் அவரவர் சுய முயற்சியால் மட்டுமே இதிலிருந்து விரைவில் மீள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |