உடல் எடையைக் குறைக்க உதவும் ஓட்ஸ் இட்லி: இப்படி செய்து பாருங்க
நாம் எல்லோரும் காலை உணவு உண்பது வழக்கம். இதை தவிர்த்தால் உடலில் பல விளைவுகள் உண்டாகும். இதை ஆரோக்கியமாக செய்து சாப்பிட்டால் அது உடலுக்கு இன்னும் பலனை தருகிறது.
இதற்காக தான் ஓட் இட்லி பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.ஓட்ஸ் என்ற முழுதானிய உணவுகள், சர்வதேச அளவில் பெரும்பாலானோரால், விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது. இது கோதுமை போன்றதொரு முழு தானியம் ஆகும்.
முழு தானிய வடிவில், இது குதிரைகளுக்கு உணவாக பயன்படுகிறது. இதை நன்றாக இடித்து, பதப்படுத்தினால் அது மனிதர்களுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. இதை பயன்படுத்தி எப்படி இட்லி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் - 2 கப்
- ரவை - 1 கப்
- தயிர் - 1 கப்
- மிளகாய் - கால் கப்
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- கருவேப்பிலை, கடுகு தாளிப்பதற்கு ஏற்ப
செய்யும் முறை
ஓட்ஸ் இட்லியை செய்வதற்கு முதலில், எடுத்து வைத்துள்ள 2 கப் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். இதை மை போல அரைத்தவுடன் இதனுடன் வறுத்த ரவை மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கருவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் கலந்து வைத்துள்ள கலவையை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை லேசாக தண்ணீர் ஊற்றி கலந்துக் கொண்டால் போதும் ஓட்ஸ் இட்லிக்கான மாவு தயாராகி விடும். இதை அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். இதன் பின்னர் இட்லி சட்டியில் ஊற்றி இறக்கினால் ஆரோக்கியமான இட்லி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |