கேரளா ஸ்டைலில் இப்படி ஒருமுறை அவியல் செய்து பாருங்க! நிச்சயம் அடிமையாகிடுவீங்க
கேரளா ஸ்டைலில் அவியல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவில் ஒன்று தான் அவியல் ஆகும். அனைத்து காய்கறிகளையும் கொண்டு செய்யப்படும் இதன் சுவையை அடித்துக் கொள்ள வேறு எந்த கூட்டுவகைகளாலும் முடியாது என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் கேரளா ஸ்டைலில் அவியல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 1/4 கப் (நீளமாக நறுக்கியது)
பீன்ஸ் - 10 (நீளமாக நறுக்கியது)
முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
அவரைக்காய் - 10 (நறுக்கியது)
கத்தரிக்காய் - 3 (நறுக்கியது)
சேனைக்கிழங்கு - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
தேங்காய் துருவல் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - 1 கிளாஸ்
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்துக்கொண்டு அதில் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
பின்பு மிக்ஸி ஜார் ஒன்றில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாள் இவற்றினை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் வேக வைத்திருக்கும் காய்கறிகளுடன் இந்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அடுப்பு தீயை குறைத்து வைத்துக் கொள்ளவும்.
சிறிது நேரம் கழித்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அடுப்பில் மற்றொரு புறம் கடாய் ஒன்றினை வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து குக்கரில் உள்ள அவியலுடன் சேர்க்கவும்.
அவ்வளவு தான் சுவையான கேரளா ஸ்டைல் அவியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |